உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

இளம் பருவத்திலே முதிய அறிவு பெற்றிருந்த நடேசனார் தையல் தொழிலைக் கருத்தோடு செய்திருப்பாரா? அவரைப் பணியாளாக வைத்திருந்த மாமனார்க்கு மகிழ்வாக இருந்திருக்கு மா? வேலையில் அக்கறை இல்லாத நடேசனாரை நினைத்து வருந்தினார். தொழிலைக் கெடுத்துக் கொள்ள யார்தாம் விரும்புவர்? அதனால் இடித்துக் கூறினார்; பழித்தும் கூறினார்.

அக் கடை வாடிக்கையாளர்களுள் வையாபுரிப் பிள்ளை என்பவரும் ஒருவர். அவர் தமிழறிஞர். அவரிடம், "சிறுவன் தான் செய்தொழிலில் அக்கறை இல்லாமல் இருக்கிறான். தமிழ் படிப்பதில் ஆர்வத்தோடு இருக்கிறான். வனை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன்?" என்று வருந்தினார். திருப்புகழ்ப் பாட்டுக்கு உரை சொல்லியதையும் உரைத்தார்.

வையாபுரிப் பிள்ளைக்குச் சிறுவன் நடேசன்மேல் அன்பு உண்டாயிற்று. அவன் அறிவை வியந்தார். முழுப்பாட்டுக்கும் உரைகூறக் கேட்டார். நடேசன் அப்பாடற்கு உரை கூறியதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தார். "இவனை என்னோடு அழைத்துச் சென்று தமிழ் கற்பிக்கிறேன்; அதில் புகழ் பெறுவான்" என்று கூறி மாமனார் இசைவுடன் அழைத்துச் சென்றார். வையாபுரியாரின் மாணவரானார் நடேசனார்.

நடேசனார் குடும்பத்திற்கு ஏதாவது வருவாய் வேண்டுமே! தந்தை இல்லாத குடும்பம் ஆயிற்றே? ஆதலால் வையாபுரியார் ஒரு வழக்கறிஞரிடம் எழுத்தராகப் பணி செய்யும் வாய்ப்பை, நடேசனார்க்கு ஏற்படுத்தித் தந்தார். ஆங்குப் பணி செய்துகொண்டு வையாபுரியாரிடம் தமிழ் கற்கும் வாய்ப்பு நடேசனார்க்குக் கிடைத்தது; கரும்பு தின்னக் கூலி கொடுத்தது போல் அமைந்தது வையாபுரியார் செயல்!

"செய்யத்தக்கது இன்னது என்று அறியாமல் அலையும் என்னை, 'பையா விருப்பத்துடன் தமிழ்படி' என்று கற்பித்த ஐயா, சிவனடியை முடியில் சூடிய அன்புடையீர், வையாபுரி என்னும் பெயருடைய வள்ளலே, உம்மை என்றும் மறவேன்" என்னும் பொருள் அமைய ஒரு பாட்டுப் பாடினார் நடேசனார். வள்ளலை வாழ்த்துதல் புலவர் கடமைதானே! கல்விச் செல்வம் வழங்கிய வள்ளல் வையாபுரியார் அல்லரோ!

“துய்யாபுரி வதுதேர்கில னாகிச்சுழல் வேனைப்

‘பையா!புரி வொடுபைந்தமிழ் பயில்'கென்றினி துய்த்த