உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

ஐயா!புரி சடையானடி முடிசூடிய அன்பா!

வையாபுரி வள்ளால்!உனை மறவேன் மறவேனே”

என்பது அப் பாட்டு.

வையாபுரியாரிடம்

தொடங்கிய

தமிழ்க்

137

கல்வி

வளர்பிறையென வளர்ந்தது. அது அப்பகுதியில் பெரும் புலவராக விளங்கியவர்களையெல்லாம் அணுகிக் கற்க ஏவியது. புலவரேறு அ. வரத நஞ்சையபிள்ளை, அவர்தம் உடன் பிறந்தார் இலக்கணக் கடல் அ. கந்தசாமிப் பிள்ளை ஆகியோரிடம் பாடம் கேட்டார்; ஐயம் அகற்றிக் கொண்டார்.

கெளமாரமடம் அருட்டிரு கந்தசாமி அடிகளிடம் முறையாகப் பயின்று மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வு எழு முதன்மையாகத் தேறினார். வேட்டைக்காரன் புதூரில் தவத்திரு அழுக்குச் சுவாமிகள் என்பார் ஒருவர் இருந்தார். அவர் நடேசனார்க்கு இளமை தொட்டே உழுவலன்போடு உதவியவர் ஆவர். திருமுறை ஓதி அதனை ஓதச் செய்தவர் அவ்வழுக்குச் சுவாமிகளே ஆவர். ஆதலால், நடேசனாரின் சைவத் தொண்டுக்கு வித்து இட்டவர் அழுக்குச் சுவாமிகளே என்பது உண்மையாம். இதனால், நடேசனார் இயற்றிய 'ஆன்மார்ப்பணத்துதி' என்னும் நூலில் அழுக்குச் சுவாமிகளை உள்ளார்ந்த அன்புடன் பாடிப் புகழ்கின்றார்:

"இழுக்கு நெறியில் புகுதாமல்

என்னைச் சிறுகா லையிலாண்டின் பொழுக்கு நெறிய தமிழ்ப்புலமை உறுக என்றே வாழ்த்தியெனை முழுக்க ஆண்ட பெருங்கருணை மூர்த்தி வேட்கைக் காரனகர் அழுக்குச் சாமி திருவடிக்கிவ் அலங்கல் அணியா யுறுமாதோ!”

என்பது அப் பாட்டு.

இனிச் சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் அவர்களின் தொடர்பும், அத் தொடர்பால் பழனி சாதுமா முனிவர் தொடர்பும் நடேசனார்க்கு வாய்த்தன. அம் முனிவரால் சைவசித்தாந்தப் பயிற்சி பெற்றுச் சிறப்புற்றார். திருப்பேரூர் சாந்தலிங்கர் திருமடத்துத் தொடர்பும் இவர்தம் ஆழ்ந்த புலமைக்கு ஆக்கமளித்தது.