உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

டாக்டர் தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள் பெயரில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நிறுவியுள்ள திருமுறைப் பரிசுச் சொற்பொழிவுத் திட்டத்தின்படி 2-4-1972இல், அப்பர் வரலாற்று ஆராய்ச்சியும் தேவாரத் திறனாய்வும்" என்னும் தலைப்பில் கவியரசு அவர்கள் ஆற்றிய உரை அவர்தம் ஆராய்ச்சி வன்மைக்குச் சீரிய எடுத்துக்காட்டாகும்.

இவ்வாறு பாவலராகவும், நாவலராகவும், சிவனடியா ராகவும், செந்தமிழ்ப் பேராசிரியராகவும், உரையாசிரியராகவும், முத்தமிழ் வித்தகராகவும், தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிப் புலவராகவும் விளங்கிய முதுபெரும் புலவர் கவியரசு கு.நடேச கவுண்டர் அவர்கள் தம் 72ஆம் அகவையில் 1972ஆம் ஆண்டு மேத் திங்கள் 26ஆம் நாள் இறைவன் திருவடி அடைந்தார்கள். அவர்கள் படைத்த அழியாத அறிவுச் செல்வம் என்றும் ஒளிமிக்க நினைவுச் சின்னமாக விளங்கும் என்பது உறுதி.

கவியரசு புகழ்மாலை

“உயருந் திருநீற் றொளிநுதலும் உருத்தி ராக்க மணிமார்பும்

மயர்வில் கேள்வி மலிசெவியும்

வள்ளல் திருப்பேர் சொலப்பொடிக்கும்

வியர்வும் அன்பு பொழிமழையும்

விளங்கும் நடேசன் என்றதிரு

பெயரும் நினைக்க நினைக்கஎன்னுட் பெருகும் உவகைக் கடல்மாதோ."

மதுரகவி