உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

அதனைக் கற்காமல் பிழையில்லாத பாட்டைப் பாட முடியாதே! குழந்தையின் உள்ளம் பாட்டின் இலக்கணம் பயில விரும்பியது.

எழுத்தறிவு பெற்றவரே அரியராகிய அச் சிற்றூரில் இலக்கணம் கற்பிக்க வல்லவர் எவரைக் காண்பது? தாமே கற்பது என உறுதிகொண்டு இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். கற்கக் கற்க ஆர்வம் பெருகியது! ஆர்வத்தால் முழுமையாக ஈடுபட்டார்! முயற்சி உயர்ச்சியைத் தருதல் உறுதியல்லவா!

அயரா உழைப்பால் அருந்தமிழ் உணர்ந்த குழந்தை புலவர் தேர்வு எழுத ஆர்வங் கொண்டார். அதற்குரிய நூல்களைப் பயின்றார். 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகப் புலவர் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்றார். அது முதல் குழந்தை, 'புலவர் குழந்தை' ஆனார்.

புலவரானதும் குழந்தை தம் ஊர் நிலைமையை மறந்து விடவில்லை. அவரையன்றிப் படித்தவர் எவரும் அவ்வூரில் இலர். ஆகவே, முதியோர்க்குத் தாமே எழுத்தறிவு புகட்டும் பணியை மேற்கொண்டார். இளைஞர் சிலர்க்குக் கற்பித்து அவர்களைக் கொண்டு முதியோர்க்குக் கற்பிக்குமாறு செய்தார். இவ்வாறு ஊர்தோறும் நிகழ்ந்திருந்தால் 'கல்லார் இந் நாட்டில் இல்லார்' என்னும் நிலைமை என்றோ ஏற்பட்டிருக்கும் அல்லவா!

புலவர் குழந்தையினிடம் ஒருவர் "உங்கள் ஊர் எது?" என வினாவினார். அவர் அதற்கு விடையாக ஒரு வெண்பாக் கூறினார். அதில் தாமன்றித் தம் ஊரில் படித்தவர் எவரும் இல்லாமையும், தாமே கற்றுக் கொண்டதையும் எடுத்துரைத்தார்.

66

‘என்னை அலாதார் எழுதப் படிக்கறியார்;

தன்னை எழுத்தறியத் தான்செய்தேன் - என்னைகொல்

சால வலசியன்னார் சங்கத் தமிழ்பாடும்

ஓல வலசெங்கள் ஊர்

என்பது அவ் வெண்பா.

தந்தை பெரியார் அவர்களால் 1925ஆம் ஆண்டில் தன்மான இயக்கம் தொடங்கப்பெற்றது. 'தமிழர் நன்னிலை பெறவேண்டும்;