உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

143

தம்மை உணர்ந்து முன்னேற வேண்டும்; முட்டுக்கட்டைகளை உடைத்தெறிய வேண்டும்; தமிழ்நாடு தன்னுரிமை பெறவேண்டும். என்பன போன்ற கருத்துக்களுடன் தன்மான இயக்கம் உருவெடுத்தது. தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பவற்றைத் தம் குருதிநாடிகள் போலக் கருதுபவர் குழந்தை. ஆதலால், அதன் தொடக்க காலத்தில் இருந்தே அவ் வியக்கத்தில் பெரும்பங்கு கொண்டார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா முதலியவர்களுடனும், பாவேந்தர் பாரதிதாசனார் ஆகியவர் களுடனும் உறவு கொண்டார். இன நன்மைக்கும் மொழி நன்மைக்கும் பாடுபட்டார்.

1938ஆம் ஆண்டிலும் 1948ஆம் ஆண்டிலும் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரும் பங்கு கொண்டார். சைப் பாடல்களாலும், பேச்சாலும், எழுத்தாலும், துண்டு வெளியீடுகளாலும் இந்தித் திணிப்பைக் கண்டித்தார். இந்தி ஆட்சிமொழியானால் என்ன நிகழும் என்பதை ஆராய்ந்து, “இந்தி ஆட்சியானால்" என்னும் நூலை வெளியிட்டார். அதனை இந்தி நுழைப்பு மாநாடுகளில் துணிவுடன் வழங்கி கருத்துக்களைப் பரப்பினார்.

சீர்திருத்த நோக்கங்கள் உடைய புலவர், வேளாள வகுப்பாரிடையே உள்ள பல பிரிவுகளையும் ஒன்று சேர்க்கப் பாடுபட்டார். 'வேளாளன்' என்னும் பெயரில் திங்கள் இதழ் ஒன்று நடத்தினார். விதவையர் மணம், கலப்பு மணம், சீர்திருத்த மணம், பெண்ணுரிமை ஆகியவற்றைப் பற்றி வேளாளன் இதழில் எழுதினார். வேளான இளைஞர்கள் ளைஞர்கள் இதனால் புத்துணர்ச்சி பெற்றனர்.

வேளாள சங்கத் தலைவர் திரு. வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் தலைமையில் தருமபுரி மாவட்டம் அரூரில் வேளாளர் மாநாடு நடைபெற்றது. இவர் அம் மாநாட்டில் விதவையர் மணம் பற்றி விரிவாக எடுத்துரைத்துத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். வாழ்நாளெல்லாம் அத்தகைய சீர்திருத்தங்களைத் தாமே முன்னின்று நடத்தியும், பல வகையாலும் பரப்பியும் வந்தார்.

கடவுள் இல்லை என்னும் கொள்கையில் உறுதியாக ருந்தவர் இவர். அதனையும் துணிந்து கூறினார். நெஞ்சில் பட்டதை