உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

மறைக்காமல் மழுப்பாமல் சொல்லும் உறுதி இயல்பாகவே இவர்க்கு வாய்த்திருந்தது. 1930ஆம் ஆண்டில் வெள்ளக்கோயில் தீத்தாம் பாளையத்தில் சுவாமி சிவானந்த சரசுவதி என்பவரோடு "கடவுள் இல்லை' என்று நான்கு நாள்கள் சொற்போரிட்டார்.

1929ஆம் ஆண்டு தொடங்கி 1962ஆம் ஆண்டு வரை 39 ஆண்டுகள் ஆசிரியப்பணி செய்தார். 1941 முதல் 1962 வரை பவானி கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியப் பணி ஆற்றி ஓய்வு பெற்றார். பவானியையே தம் வாழ்விடமாக அமைத்துக்கொண்டார்.

புலவர் தம் இனிய வாழ்க்கைத் துணையாக அமைந்தவர் முத்தம்மையார். இவர்கள் இனிய வாழ்வின் கனிகளாக மகளிர் இருவர் தோன்றினர். அவர்கள் சமத்துவம், சமரசம் என்னும் பெயரினர். புலவர் உள்ளத்து நிரம்பி வழிந்த கொள்கைகள் பெயர் சூட்டலிலேயே வெளிப்படுகின்றது அல்லவா!

இசைப்பாடல் பாட அடியெடுத்து வைத்த குழந்தை, புலமை நலங்கனிந்த நூல்களை இயற்றித் தமிழ்த் தாய்க்கு அணி செய்தார். திருக்குறளுக்கும், தொல்காப்பியப் பொருளதி காரத்திற்கும் புத்துரை கண்டார். அரசியல் அரங்கம், நெருஞ்சிப் பழம், காமஞ்சரி முதலிய நூல்களை இயற்றினார்.

இராவணன் ஏற்றங்களை இயம்புவதற்கு எழுந்த நூல் 'இராவண காவியம்'. புலவரவர்கள் சீர்திருத்தக் கொள்கையும், புலமைத்திறமும் நன்கு புலப்பட எழுந்த புத்தம் புதிய காவியம் இராவண காவியம் ஆகும். அதிலுள்ள புரட்சிக் கருத்துக்களைக் கண்டு அந்நாள் காங்கிரசு அரசு அந்நூலுக்குத் தடை விதித்தது. பின்னர் ஏற்பட்ட கழக அரசில் அந் நூல் தடைநீங்கி உலா வந்தது. தடைப்படுத்தப்பட்ட இராவண காவியம் புலவர் குழந்தையின் புகழை நாடெங்கும் நன்கு பரப்பிற்று! எதிர்ப்பினால் விளைந்த நன்மை அது!

காமஞ்சரி என்னும் நாடகநூல் : இவர் செய்யுள் நடையில் இயற்றிய இந்த நாடக நூல் ஆங்கிலப் பெருங்கவிஞரான மத்தேயு அரனால்டு (Matthew Arnold) என்பவரால் செய்யப்பட்ட சோராப்பும் ரூஸ்தமும் (Sohrab and Rustum) என்னும் ஆங்கில நூலைத் தழுவிச் செய்யப்பட்டதாகும். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நடந்த ஒரு பாரசீகக் கதையை பிர்தோசி என்னும் பாரசீகக் கவிஞர் 'சோராபின் கதை' என்னும் பெயர் வைத்து அம்