உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

145

மொழியில் ஒரு நூலாக எழுதினார். அதனைக் கண்டு பின்னர் ஆங்கிலத்தில் மத்தேயு அர்னால்டு எழுதினார்.

கதையை மாற்றாமல், நாடக உறுப்பினர் பெயர்களையும் இடங்களின் பெயர்களையும் தமிழாக மாற்றி இவ்வாசிரியர் 'காமஞ்சரி' என்னும் நூலை அமைத்துள்ளார். இந்த நாடக நூல் தமிழ் மரபை விளக்கும் தமிழ் நாடகம்போலவே காணப்படு கின்றது. இந்த நாடகநூல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை வகுப்புக்கு ஒரு முறை 1971ஆம் ஆண்டில் பாடமாக வைக்கப்பெற்றது. இந் நூல் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்ற மனோன்மணீயம் என்னும் நாடகத்தைப் போன்று காட்சியளிக்கின்றது.

எவர் துணையுமின்றித் தாமே இடர்ப்பட்டுத் தமிழ் கற்றவர் அல்லரோ புலவர் குழந்தை! ஆதலால், அந் நிலை பிறர்க்கு ஏற்படக்கூடாது என எண்ணி எளிமையாகக் கவிதை இலக்கணங் களை எவரும் கற்றறியுமாறும் கவிதை இயற்றுமாறும் 'யாப்பதிகாரம்’, ‘தொடையதிகாரம்' என இரண்டு நூல்களை இயற்றினார். பிற்காலத்தில் உண்டான பாவகைகளுக்கு அந் நூல்களில் இலக்கண அமைதி காட்டப் பெற்றுள்ளமை கவிபாடுவார்க்குப் பெரும்பயன் நல்குவதாம்.

கவிதை நூல்களையன்றி உரைநூல்களும், உரைநடை நூல்களும் பல இயற்றினார் குழந்தை. கொங்குநாடு தமிழக வரலாறு, தீரன் சின்னமலை, கொங்கு நாடும் தமிழும், கொங்குக் குலமகளிர், அண்ணல் காந்தி, சங்கத் தமிழ்ச் செல்வம், நீதிக் களஞ்சியம் முதலியவை அத்தகைய நூல்களாம்.

காந்தக் கருவியின்முள் எப்பொழுதும் வடக்கு நோக்கியே நிற்பதுபோலப் புலவர் குழந்தை தம் வாழ்நாளெல்லாம் தமிழ் வளர்ச்சி நோக்கியே இருந்தார். மொழிக் கேடு எங்கு முளைத்தாலும் அதனைக் கண்டிக்கத் தவறார். மொழி நலங்கருதிய அமைப்புக் களில் பெரும் பங்கு கொண்டார். 'உலகத் தமிழ்க் கழகம்' தோன்றிய நாள் தொட்டு அதில் கடமையாற்றினார். தமிழகப் புலவர் குழுவிலும் இருந்து பணி செய்தார்.

பிழைப்பட்ட பாடல்களைக் காணும்போது பெருந் துயரடைவார். முறையாக இலக்கணம் பயின்று பாட்டியற்ற வேண்டுமென்று அனைவர்க்கும் கூறுவார். பிழைப்பட்ட பாடல்