உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சிவநெறிச் செம்மல் கந்தசாமி முதலியார்

திருவள்ளுவரின் புலமை மாண்பினை அறிந்த பெரியோர்கள் அவரைத் 'தெய்வப் புலவர் திருவள்ளுவர்' என்று புகழ்ந்தனர். தமிழ் மொழியின் தனிப்பெருஞ் சிறப்புக்களை அறிந்து அதனை ‘தெய்வத்தமிழ்' என்று பாராட்டினர். பெரியோர்கள் மொழித் தொண்டையும், தெய்வத் தொண்டையும் தம் இரண்டு கண்கள் எனக் கொண்டு வாழ்ந்தனர். அத்தகைய வர்களுள் ஒருவர் அறிஞர் கந்தசாமி முதலியார் ஆவர்.

கொங்கு நாட்டைச் சேர்ந்த பழம் புகழ் வாய்ந்த பேரூர்களுள் கருவூர் என்பதும் ஒன்று. அது திருவிசைப்பாப் பாடிய கருவூர்த்தேவர் முதலிய பெருமக்கள் தோன்றிய பெருமைமிக்க ஊர்; திருஞானசம்பந்தர் முதலிய பெரியோர் களால் பாடப்பெற்ற புகழ்மிக்க ஊர்; 'ஆம்பிரவதி' என்னும் 'ஆன்பொருநை' ஆற்றின் கரையிலே அமைந்த அழகிய கருவூரிலே அறிஞர் கந்தசாமியார் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் உலகநாத முதலியார். தாயார் பெயர் பார்வதி அம்மையார். பிறந்த ஆண்டு கி.பி. 1838.

கந்தசாமியார் இளைஞராயிருந்தபோதே அவர்தம் தந்தையார் உலகநாதர் இயற்கை எய்தினார். அதனால் பார்வதி அம்மையார் தாம் பிறந்த வீடு சென்று, உடன் பிறந்தோர் துணையால் வாழ்ந்தார். இச் செய்திகளைக் கந்தசாமியார் தாம் இயற்றிய 'திருப்பேரூர்க் கிள்ளைவிடுதூது' என்னும் நூலில் கூறியுள்ளார்.

“வீசு புகழ்சேர் வியன்பதியென் றிவ்வுலகம்

பேசு கருவூரில் பிறந்தேன்யான் - மூசுதிரை வெள்ளப் புனல்மே வியசீர்க்கங் காகுலத்தில் பிள்ளையென வந்து பிறந்தேன்யான் - வள்ளல்பேர் பூண்உலக நாதன் பொருந்தவரும் பார்ப்பதிபால்