உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

புதிய நூல்கள் இயற்றுவதிலும் ஏவிற்று. மாலைமாற்றுமாலை, ஏகபாத நூற்றந்தாதி ஆகிய நூல்களை இயற்றினார்.

‘விகடகவி' என்னும் தொடரை முதலிலிருந்து படித்தாலும் இறுதியிலிருந்து படித்தாலும் 'விகடகவி' என்றே வரும். துபோல் ஒருபாடலை முதலிலிருந்து படித்தாலும் இறுதி யிலிருந்து படித்தாலும் ஒரே மாதிரி வருவது மாலைமாற்று எனப்படும்.அப்படிப் பாடல்கள் பலவற்றை, ஒருபாட்டின் இறுதி அடுத்தபாட்டின் முதலாக வருமாறு பாடுவது 'மாலைமாற்று மாலை' எனப்படும்.

ஏகபாதம் என்பது ஓர் அடி பாட்டின் ஓர் அடியை அப்படியே மாறாமல் நான்குமுறை எழுதி வெவ்வேறு பொருள் கூறுவது 'ஏகபாதம்' எனப்படும். அதில் நூறு பாடல்கள் அந்தாதியாகப் பாடுவது ஏகபாத நூற்றந்தாதி ஆகும். இத்தகைய அரிய நூல்களை யெல்லாம் எளிமையாகப் பாடினார் சண்முகனார். இந்நிலையில் சண்முகனார் புகழ் பக்கங்களிலும் பரவியது. அப் புகழ் அவர் எதிர்பாராத நிலையில் வேலையைக் கொண்டு வந்து நிறுத்தியது.

ஒரு

ஒரு நாள் சண்முகனாரிடம் ஒருவர் வந்தார். அவர், "ஐயா, நான் மதுரையில் இருந்து வருகிறேன். சேதுபதி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் என்னை அனுப்பி வைத்தார். அப் பள்ளிக்கு ஒரு தமிழாசிரியர் உடனே வேண்டும். அதற்கு தாங்கள் தக்கவர் என அறிந்து தங்களை அழைத்து வருமாறு என்னை அனுப்பினார்" என்றார். தம் குடும்ப நிலைமையை எண்ணினார் சண்முகனார். தம் விருப்பத்துக்கு ஏற்ற பணி அஃது என்பதையும் உணர்ந்தார். அதனால் அவ்வழைப்பை ஏற்றுக்கொண்டு மதுரைக்குச் சென்று, அப்பணியை ஏற்றுக் கொண்டார். அப்பொழுது சண்முகனார்க்கு வயது இருபத்து இரண்டேயாகும்.

கி.பி. 1890 ஆம் ஆண்டில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக அமர்ந்தார் சண்முகனார். மொழிப் பற்றும் மொழித் திறமும் மிகுந்தவர் அவர். ஆனால், அப்பள்ளியில் அயல் மொழிகளுக்குத் தந்த பெருமையைத் தாய்மொழிக்குத் தாராமை அவரை நாளும் துன்புறுத்திக் கொண்டிருந்தது. இந்நிலையில் தமிழ்மொழிக்குரிய பாடவேளையையும் தலை மையாசிரியர் குறைத்துவிட்டார். அதனால் வருந்தி முறையற்ற இச்செயலை ஏற்கமுடியாது என்று கடிந்துரைத்து வேலையை விட்டு வெளியேறினார் சண்முகனார். பன்னிரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த பள்ளி என்று எண்ணாமலும், இனி வேலைக்கு என்ன