உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 1

LO

5

செய்வது என்று எண்ணாமலும் தமிழ்மொழிக்குத் தரவேண்டிய பெருமையைத் தாராத பள்ளியில் பணி செய்ய விரும்பாது வெளியேறியமை சண்முகனார் மொழிப்பற்றுக்குச் சிறந்த சான்றாகும்.

சேதுபதி உயர்நிலைப்பள்ளி வேலையை விட்ட பின்பு சண்முகனார் சென்னைக்குச் சென்றார். அங்கே தவத்திரு மறைமலையடிகளாரைக் கண்டு அளவளாவி இன்புற்றார். முன்னரே அடிகளார்க்கும் சண்முகனார்க்கும் கடிதத் தொடர்பு இருந்தது. அத் தொடர்பை இச் சந்திப்பு மிக வலுப்படுத்திற்று.

அடிகளார் சென்னை, கிறித்தவக் கல்லூரியில் பேராசிரி யராகப் பணிபுரிந்து வந்தார். அங்கே சண்முகனாரையும் வேலையில் அமர்த்த விரும்பினார். அதனால் கல்லூரி முதல்வர் மில்லர் துரைமகனாரிடம் தம் விருப்பத்தை அடிகளார் உரைத்தார். அடிகளார் உரையை நிறைவேற்ற மில்லர் துரைமகனார் சைந்தார்.சண்முகனார்க்கு ஆங்கிலம் தெரியாது என்பதை அடிகளார் வழியாக அறிந்து கொண்ட மில்லர் துரைமகனார், வேலையில் சேர்ந்த பின்பு ஓரளவு ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உரைத்தார். இச் செய்தியை அடிகளார் சண்முகனாரிடம் நயமாகக் கூறினார். ஆனால், சண்முகனார் “எனக்கு வயது ஆகிவிட்டது; இனிப் புதிய ஒரு மொழியைக் கற்க முடியாது; கற்க எனக்கு விருப்பமும் இல்லை. ஆதலால் வ்வேலை எனக்கு வேண்டா; நிறைவேற்ற முடியாத உறுதியை வேலை பெறுதற்காகக் கூறமுடியாது" என மறுத்துவிட்டார். அடிகளார் தம் முயற்சி பயன்படாமைக்கு வருந்தினார். ஆயினும், சண்முகனார் உயர்ந்த நெஞ்சத்தை உணர்ந்து இன்புற்றார்.

1901 ஆம் ஆண்டிலே பாலவனத்தம் குறுநிலமன்னர் பாண்டித்துரைத் தேவரால் மதுரையில் ஒரு தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப் பெற்றது. அதன் தொடக்க விழாவுக்குப் பெரும்புலவர்களெல்லாம் அழைக்கப் பெற்றிருந்தனர். விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. புலவர்கள் தத்தம் ஆராய்ச்சித் திறங்களைக் காட்டினர். அத்தகையவர்களுள் நம் சண்முகனாரும் ஒருவர் ஆவர்.

தமிழ்ச் சங்கம் தொடங்கி ஓராண்டுக்குப் பின் பேராசிரியர் ஒருவர் வேண்டிய நிலை இருந்தது. அவ்விடத்திற்குத் தக்கவர் சண்முகனாரே எனப் பலரும் கருதினர். சங்கத் தலைவர் பாண்டித்துரைத் தேவரும் சண்முகனாரை நன்கு அறிவார். ஆதலால், அவரைப் பேராசிரியராக அமர்த்தினார். சங்கத்தில்