உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

அமர்ந்தது தம் பொழுதையெல்லாம் சண்முகனார் தமிழ் ஆராய்ச்சியிலேயே செலவிடுவதற்கு வாய்ப்பு ஆயிற்று.1902 முதல் 1906 வரை நான்கு ஆண்டுகள் சங்கத்தில் பேராசிரியராக இருந்தார்.

சேதுபதி உயர்நிலைப்பள்ளியிலும், சங்கக் கல்லூரியிலும் பணியாற்றிய காலங்களில் சண்முகனார் புதிதாகப் படைத்த நூல்களும் ஆராய்ச்சி நூல்களும் பல. அவை : இன்னிசை

ருநூறு, நவமணிக்காரிகை நிகண்டு, மீனாட்சியம்மை சந்தத் திருவடிமாலை, வள்ளுவர் நேரிசை, திருக்குறள் சண்முகவிருத்தி, தொல்காப்பியர் சண்முகவிருத்தி, நுண்பொருட்கோவை, சைநுணுக்கச் சிற்றுரை என்பன. நூல்களை அல்லாமல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சிலவற்றையும் எய்தினார் சண்முகனார். அவை செந்தமிழ், தமிழ்ப்பொழில், விவேக பாநு, ஈழகேசரி முதலாய இதழ்களில் வெளியிடப் பெற்றன. ஆராய்ச்சி உலகில் தனிச் செங்கோல் செலுத்தும் வேந்தராக விளங்கினார் சண்முகனார். தம் ஆராய்ச்சிகளை மறுத்தெழுதியவர்களைத் தக்கமுறையால் மறுத்து வெற்றி வீரராகத் திகழ்ந்தார்.

தமிழ்ச்சங்கக் கல்லூரிப் பேராசிரியராகச் சண்முகனார் பணிசெய்த காலத்தில் அவர் புகழ் பரவியது போலவே உடலில் இருந்த நோயும் பெருகத் தலைப்பட்டது. எவ்வகை முயற்சியாலும் தடுக்க முடியாத அளவுக்கு வலுத்தது. வயிற்று வலியாகத் தொடங்கிய நோய் அடிவயிற்றில் பெரிய கட்டியாகத் திரண்டது. அறுத்து எடுத்தால் அன்றித் தீராது என மருத்துவர்கள் கூறினர். அறுவையால் உயிருக்கும் கேடுவரக் கூடும் எனவும் அச்சம் தெரிவித்தனர். இந்நிலையில் பணி செய்ய இயலுமா? பணியை விடுத்தால் இயல்பாகவே பொருள் முட்டுப்பாடு உடைய அவர் ஊதியமும் இன்றிப் பெருஞ்செலவும் செய்ய நேருமே! என்ன செய்வார்!

சங்கத் தலைவர் ஆகிய பாண்டித்துரைத் தேவர், சண்முகனார் புலமைக்குத் தலைவணங்கும் தன்மையாளர். சண்முகனார்க்கு வந்த நோயை நினைந்து உருகினார். அதனைத் தீர்க்க வேண்டிய வகையை ஆராய்ந்தார். ஓர் ஆண்டுக்காலம் சம்பளத்துடன் விடுமுறை தந்தார். கைச்செலவுக்கென உரூபாய் 200 நன்கொடையாக வழங்கினார். அதனைக் கொண்டு புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஆலங்குடிக்குச் சென்று நாட்டு மருத்துவர் ஒருவரிடம் மருந்துண்டு வந்தார். அதனால் பயன்காணாது இருந்த அளவில், அவ்வூர் அரசினர் மருத்துவ மனையில் பணிசெய்து வந்த அருளாளர் திரு. வேணுகோபால நாயுடு என்பார் தாமே முன்வந்து உதவினார். அவர் உதவியால்