உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் 1

7

எழுந்து நடக்கும் அளவு நலம் பெற்றார். பின்னர் அவ்வன்பரது வேண்டுகோளின்படி தஞ்சை மாவட்ட மருத்துவர் திரு. எச்.எம். அக்கீம் துரைமகனாரை அணுகி மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாக மூன்றுமுறை அறுவை செய்து முழுநலம் பெற்றார். இதனால் சண்முகனார், "இப்போதுள்ள உடலை நோக்கின் தந்தையும் தாயும் ஆயினார் அத்துரை அவர்களே பாராட்டினார்.

""

என்று

சண்முகனார் உடல்நிலை நலம் பெற்றது. ஆயினும் கல்லூரிப் பணியை ஏற்கும் அளவுக்கு இடம் தரவில்லை. அதனால் வேலையை விடுத்துச் சோழவந்தானிலேயே தங்கினார். பொழுதெல்லாம் ஆராய்ச்சியிலேயே செலவிட்ட சண்முகனார் வீட்டுள் அடங்கிக் கிடந்தாலும் ஆராய்ச்சியும் ஒடுங்கி விடுமா? விடாது அல்லவா! ஆதலால் வாழ்நாள் எல்லாம் இலக்கண இலக்கிய ஆராய்ச்சிகளை இடையறாமல் செய்தார். அவ்வப்போது தமிழ்ச்சங்கம் முதலிய இடங்களில் நடந்த கூட்டங்களிலும் விழாக்களிலும் பங்கு கொண்டார். இதழ்களுக்குக் கட்டுரை எழுதினார். தம்மை அணுகியவர் ஐயங்களை அகற்றினார்.

மதுரையில் 'தமிழ் லெக்சிகன் அகராதி' தொகுக்கும் பணியில் மறைத்திரு சாண்ட்லர் என்பார் ஈடுபட்டிருந்தார். அவர் சண்முகனாரின் புலமையைக் கேள்வியுற்று அவரை அகராதி தொகுக்கும் பணிக்கு ஆசிரியராக அமர்த்தினார். சிறிதுகாலம் அப் பணியைச் செய்தார் சண்முகனார். அதற்கும் உடல்நிலை இடம் தரவில்லை. அவ் வேலையையும் விடுத்தார். அகராதி வேலையும் மதுரையில் இருந்து சென்னைக்கு அதன் பின்னர் மாறியது.

சண்முகனார்க்கு வயது நாற்பத்துஆறு நடந்து கொண்டி ருந்தது. அவர்க்குத் தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்த அழகர்சாமி தேசிகர் தம் எண்பத்து ஆறாம் வயதில் இயற்கை எய்தினார். அந்நிகழ்ச்சி சண்முகனாரை மிக வருத்தியது. உருக்கமிக்க இரங்கல் பாடல்கள் இயற்றினார். ஏக்கந்தீரப் பல மாதங்கள் ஆயின.

தேசிகர் மறைந்து பதின்மூன்று மாதங்கள் கடந்தன. வீட்டுத் திண்ணையில் அமர்ந்து முகம் வழித்துக் கொண்டிருந்தார் சண்முகனார்.அப்பொழுது ஒரு கடிதம் வந்தது. அதில் “வித்துவான் அ. சவமுகம் பிள்ளை, தெற்குத்தெரு, சோழவந்தான்" என்று முகவரி எழுதப்பட்டு இருந்தது. அக்கடித முகவரியைக் கண்டு வெதும்பினார் சண்முகனார். அதனை எழுதியவர் அரைகுறைப் படிப்பாளரா? அல்லர்! முதிர்ந்த புலவர்கள் பரம்பரையிலே வந்த புலவர் ஆராய்ச்சியாளர்-இனிய நண்பர் ஆகிய மு.ரா. கந்தசாமிக் கவிராயர்