உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

எழுதிய கடிதம் அது. ஆனைக்கும் அடிசறுக்கும்" என்னும் பழமொழி மெய்யாயிற்று!

தமக்கு முகம் வழித்துக் கொண்டிருந்த இராமனிடம், "இதனை எழுதியவர் பெரும் புலவர், என்னைச் சவமுகம் பிள்ளை என்று எழுதியிருக்கிறார். இனி என் சவத்தின் முகத்திற்குத்தான் நீ வழிக்க வேண்டியிருக்கும்" என்று கூறினார். கடிதம் எழுதிய கந்தசாமிக் கவிராயர்க்கும் நொந்துபோய்ச் சில பாடல்களை எழுதி அனுப்பினார்.

66

முப்பது நாட்கள் முடியவில்லை. அந்தோ! சண்முகனார் படுத்த படுக்கையானார். தூய துறவியாகிய சிவப்பிரகாச அடிகளையும் துடிக்குமாறு செய்தது சண்முகனார் நிலை. தம் மாணவர் நலம் பெறுவதற்காக இரவு பகல் பாராது பாடுபட்டார் அடிகள். ஒருநாள் காலையில் மருந்தும் கையுமாய்த் தெருவில் வந்து கொண்டிருந்தார் அடிகள். சண்முகனார் விண்ணுலக விருந்தாயினார் என்னும் செய்தியைக் கேட்டு விம்மினார். கண்கள் குளங்கள் ஆயின. அடிகளார் நிலையே அவ்வாறாயின் மற்றையோர் நிலையைக் கூறவேண்டுமோ? அண்ணல் சண்முகனார் 1915 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் பதினொன்றாம் நாள் காலை 6.30 மணிக்குப் புகழ்வடிவானார். அப்பொழுது அவர்தம் வயது 47.

தமிழ்மலையாம் மறைமலையடிகள், "நம் தமிழன்னை இன்று தன் தலைமைப் புதல்வனை இழந்துவிட்டாள் என்று ஏங்கினார். பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், "அருமை ஆசானையான் இழந்துவிட்டேன்; தமிழகம் தனியொரு புலவனை இழந்துவிட்டது" என்று இரங்கினார். "எனக்கு இரங்கல்பாட வேண்டிய சண்முகனுக்கு நானோ இரங்கல் பாட" என்று புலம்பினார் சிவப்பிரகாச அடிகள்! சண்முகனார் மறைந்து ஐம்பது நாட்கள் கடந்தன. சிவப்பிரகாச அடிகள் தம் மாணவர் வழியைப் பின்பற்றி நடந்துவிட்டார்! அறிஞர் முரா. கந்தசாமிக் கவிராயரோ மூன்று திங்களுக்குள் தொடர்ந்தார்! இயற்கை நடத்தும் திருவிளையாடலை எவரே இயம்ப வல்லார்!

சில குறிப்புகள்

உடல் : சண்முகனார் உடல் ஒல்லியானது; நெட்டை என்றோ குட்டை என்றோ கூறமுடியாத உயரம்; செந்நிறம்; பேணி வளர்க்கப்படாத மீசை; வரன்முறையாக மழித்தலை அறியாத