உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 1

9

முகம்; குடுமித் தலை; ஒளியுடைய கூரிய கண்கள்; வரிசையான காவிக்கறை ஏறாத அழகிய பற்கள்; சற்று நீண்டு குடைந்த காது; காற்று வெயில் குளிர் இவற்றுக்கு மறைப்பு அறியாத மார்பு; நீண்ட கைகள்; விரைந்து நடக்கும் கால்கள்; ஒற்றைச் சுற்று வேட்டி; கழுத்தைச் சுற்றிச் சுருண்டு தொங்கும் நீளத் துண்டு-பொதுவில் தமிழகத்து உழவர் திருக்கோலம்! இவை சண்முகனார் உடலைப் பற்றிய குறிப்புகள்.

உள்ளம் : சிறிய நன்றியையும் பெரிது பாராட்டுதல்; எளிமையான விரும்புதல்; புலமையாளரை மதித்தல்; உண்மையை எடுத்துரைக்க அஞ்சாமை; தாம் வறுமைப்பட்டாலும் தக்கார்க்கு இயன்றவாறு உதவுதல்; களங்கம் அற்ற நினைவும் சொல்லும் செயலும்; தமிழே வாழ்வு எனக் கொள்ளும் தகைமை ஆகியவை சண்முகனார் உள்ளம் பற்றிய குறிப்புகள்.

குடும்பம் : சண்முகனார் தம் நாற்பத்து ஏழாம் வயதில் இயற்கை எய்தினார் என்பதை அறிந்தோம். ஆனால், அவ்வயதுள் செயற்கரும் செயல்களைச் செய்து சிறந்து விளங்கினார். புலமையில் இணையற்ற வேந்தராகத் திகழ்ந்தார். கருத்து ஒத்த இல்வாழ்க்கையும் அமைந்தது; ஆயினும் மக்கட்பேறு வாய்க்க வில்லை. சண்முகனாரின் தம்பியார் இராமபிள்ளையின் மைந்தர் மாணிக்கவாசகம் என்பவரை வளர்ப்பு மகனாகக் கொண்டார். அவர்தம் தங்கையின் மகனார் கவிக்குஞ்சரம் பிள்ளை என்பவர். அவர் புலமையாளராய்த் திகழ்கின்றார்.

சில சுவையான செய்திகள்

கூலியாளான விந்தை :

சண்முகனார் ஓர் ஊருக்கு நடந்துபோய்க் கொண் டிருந்தார். அவ்வழியில் ஒரு வழிப்போக்கர் கனமான சுமையுடன் வந்தார். அவர் சண்முகனாரின் எளிய தோற்றத்தைக் கண்டு, "இச் சுமையை எடுத்துக் கொண்டு வந்தால் கூலி தருகிறேன் என்றார். சண்முகனார் சுமையை எடுத்துக் கொண்டு நடந்தார். சண்முகனார் திரும்பிச் செல்ல வேண்டிய விலக்குப் பாதை வந்தது. சுமையை உரியவரிடம் தந்து பிரியத் தொடங்கினார். 'கூலி எவ்வளவு?' என்று கேட்டார் சுமைக்கு உரியவர். 'வேண்டா' என்று மறுத்துவிட்டார் சண்முகனார். அவ்விலக்கில் இருந்து சண்முகனாரை அழைத்துச் செல்லுவதற்காக அவ்வூர்க்காரர் மேளம், பூமாலை ஆகியவற்றுடன் நின்றனர். மங்கல ஒலி முழங்க