உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

மாலையிட்டுவரவேற்றனர். சுமையைத் தந்தவர் இமை கொட்டாமல் பார்த்து நாணினார். 'இவர் யார்?' என்று வரவேற்க வந்தவர் களிடம் கேட்டறிந்து மன்னிப்புக் கேட்டார். மெல்லுள்ளம் படைத்தவராகிய சண்முகனார், "பிறருக்கு உதவி செய்வதற்காகவே மனிதன் பிறந்துள்ளான். நீங்கள் கவலை கொள்ளவும் நான் மன்னிக்கவும் ஆகிய தவறு எதுவும் நடந்துவிடவில்லை" என்று தேற்றி அனுப்பினார்.

தெப்பக்குளத்தில் மூழ்குதல் :

சண்முகனார்க்கு நீந்தத் தெரியாது. அவர் ஒரு நாள் மதுரையில் உள்ள வண்டியூர்த் தெப்பக்குளம் என்னும் மாரியம்மன் தெப்பக் குளத்தில் இறங்கினார். பாசி படிந்திருந்த படித்துறை வழுக்கிவிட்டது. சண்முகனார் நீருள் சென்று மூழ்கித் திக்கு முக்காடினார். அப்பொழுது சுப்பிரமணிய முதலியார் என்பவர் ஓடிவந்து சண்முகனாரைக் காப்பாற்றினார். அவரைத் தாம் இயற்றிய ஏகபாத நூற்றந்தாதி என்னும் நூலில் 'உயிர்காத்த உபகாரி' என்று பாராட்டினார் சண்முகனார்.

துறவி காட்டிய மருந்து :

சண்முகனார் நோயில் படுத்திருந்தார். மருந்துகளால் அது தீரவில்லை. ஒருநாள் இரவில் சண்முகனார் உறங்கிக் கொண்டு இருந்தபோது ஒரு துறவியார் தோன்றினார். கையைப் பிடித்து அழைத்தார். அவரைத் தொடர்ந்து பின் சென்றார் சண்முகனார். நாகமலைக்குச் சென்று ஒரு மருந்துச் செடியைக் காட்டி, "இதைப் பறித்து உண்க' என்றார். செடியைப் பறிக்கச் சண்முகனார் குனிந்து நிமிர்ந்தபோது துறவியைக் காண வில்லை. வியப்படைந் தவராக வீடு திரும்பினார்.படுத்திருந்த சண்முகனாரைக் காணாமல் தேடியலைந்த வீட்டினர் நிகழ்ந்ததை அறிந்து வியப்புற்றனர். கூட்டத்தில் குறும்பன் :

அரசஞ் சண்முகனார் ஒரு கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது கூட்டத்தின் அமைதி கெடுமாறு ஒரு சிறுவன் ஓடியாடிக் கொண்டிருந்தான். பலமுறை நயமாகச் சொல்லியும் அவன் அடங்கவில்லை. அதனால் 'படுபயலே' என்றார் சண்முகனார். படுத்துவிட்டான் பையன்; கால் கைகளை அசைக்கவும் அவனால் முடியவில்லை. முடியவில்லை. பின்னர் பின்னர் அவன் நிலைமையைக் கண்டவர்கள் சண்முகனாரிடம் உரைத்தனர்.