உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் 1

-

11

'பாடு பயலே' என்றார். பையன் பழையபடியே துள்ளி ஓடினான். ஆனால், கூட்டத்துள் இல்லை. வீட்டுக்கு!

யாமதுரையோம் :

சண்முகனார் இலங்கைக்குச் சென்றிருந்தார். அவரை வரவேற்பதற்குத் தொடர்வண்டி நிலையத்தில் பலர் நின்றனர். ஆனால், அவர்கள் முன்னே சண்முகனாரைக் கண்டவர்கள் அல்லர். சண்முகனார் நேரே மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்றார். அங்கிருந்தவருள் ஒருவர் இவர்தாம் சண்முகனாரா இருக்க வேண்டும் என்று எண்ணித் "தாங்கள் யார்?" என வினாவினார். அதற்குச் சண்முகனார் "யாமதுரையோம்" என்றார். யாம் அது உரையோம்" என்றும், "யாம் மதுரையோம்" என்றும் இருபொருள் தருகின்றது அல்லவா!

தந்த வரிசை போயிற்று:

சண்முகனார்க்குச் சில பற்கள் போய்விட்டன. அதனால் பல் கட்டியிருந்தார். அதனை ஒருவர் 'தந்த வரிசை போயிற்று' என்றார். 'தந்த வரிசை' என்பது 'பல்வரிசை' அல்லவா! இதனைக் கேட்ட சண்முகனார், "ஆம்! கடவுள் தந்த வரிசை போயிற்று" என்றார்.

பொற்காப்புக் கொடை:

1906 ஆம் ஆண்டில் தமிழ்ச் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ந்தது. அதன் தலைவராக முதுபெரும் புலவர் உ.வே.சாமிநாதையர் இருந்தார். அவர்தம் தலைமை உரையில், "மதுரையில் இருந்து அரிய தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர் நச்சினார்க்கினியர் பெயரால் ஒரு நினைவுச் சின்னம் ஏற்படுத்த வேண்டும்" என்றார். அதற்குப் பெருமக்கள் பலர் நன்கொடை வழங்கினர். சண்முகனார் தம் கையில் போட்டிருந்த தங்கக் காப்புகளை நன்கொடையாக வழங்கினார். தங்கக் காப்பு களை வழங்கும் அளவுக்கு வளமுடையவராகச் சண்முகனார் ருக்கவில்லை. ஆனால், அவர் உள்ளம் அவ்வளவு வளமை யானது! உள்ளம் உடைமைதானே உடைமை!