உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பண்டித மணி

பொன்னமராவதியில் ஒரு மருத்துவமனை உண்டு. அதில் மருத்துவராக வேணுகோபால் நாயுடு என்பவர் இருந்தார். அம் மருத்துவமனையிலே பெரும்புலவர் அரசஞ் சண்முகனார் மருத்துவம் பெற்று வந்தார். ஒரு நாள் நாயுடு அவர்கள் வெளியே சென்றிருந்தார். சண்முகனார் மருத்துவமனைத் தாழ்வாரத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே ஒரு வண்டி வந்தது.

வண்டியில் இருந்து தூய வெண்ணிற ஆடை உடுத்த ஒரு பெரியவர் இறங்கினார். தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்த சண்முகனாரிடம் "கொஞ்சம் தண்ணீர் வேண்டும்" என்றார். சண்முகனார் எளிமையே வடிவானவர். சட்டை போடாமலும் குடுமித் தலையுடனும் நின்றார். அவரைப் 'பணியாள்' என்று எண்ணிவிட்டார் போலும் வண்டியில் வந்தவர்!

சண்முகனார் விரைந்து தண்ணீர் கொண்டு வந்து தந்தார். பின்னர் 'இட்டிலி வேண்டும்! கிடைக்குமா?' என வினாவினார் வண்டியில் வந்தவர். சண்முகனார் இட்டிலி வாங்கிக் கொண்டு வந்து அன்புடன் வழங்கினார். இந்நிலையில் வெளியே சென்றிருந்த வேணுகோபால் நாயுடு மருத்துவமனைக்குத் திரும்பி வந்தார்.

"பெரும் புலவர்களாகிய உங்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அதற்குள் நீங்களாகவே பழகிக் கொண்டது மகிழ்ச்சியளிக் கிறது" என்றார். இருவரும் திகைப்பு அடைந்தனர். "பெரும் புலவர் என்கிறாரே! இவர் யார்?" என இருவருமே திகைப்பு அடைந்தனர். வண்டி யில் வந்தவர் யார்?' என்னும் திகைப்பு நமக்கும் உண்டாகத்தானே செய்யும்! அவரே பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் ஆவர்.

பண்டித மணிக்குத் தணியாத ஆவல் ஒன்று இருந்தது. அது, சண்முகனாரிடம் தொல்காப்பிய லக்கணத்தைப் பாடம்