உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள்-1

15

(மறைத்துக் கொள்ளாது) அளித்தன. திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் உயரிய செய்யுள்களும் ஆசிரியரின் உதவி இன்றியே யான் பயின்ற பொழுதும் பழம் பாடம் போன்று எனக்கு விளக்கமாகப் பொருள் புலப்படலாயின.

-

"மேலும், என் இளம் பருவத்து நண்பருக்கும் அயலுள் ளார்க்கும் அவற்றின் பொருளை எடுத்துச் சொல்லுதலும் உண்டு. நான் இவற்றை அயலார்க்குச் சொல்லுங்கால் அவர்கள், 'நீ யாரிடம் பாடம் கேட்டாய்? எங்கே படித்தாய்?' என்று என்னை அடிக்கடி வினவுவது உண்டு. இங்ஙனம் வினவுவார்க்கு மறுமொழி கூற என்னால் இயல்வதில்லை. 'யான் ஒருவரிடமும் பாடங் கேட்காமலே இவற்றைத் தெரிந்து சொல்கின்றேன்' என்றாலோ அவர்கள் அக்கூற்றை நம்புதலும் அரிது அன்றோ!"

செட்டி நாட்டுத் திண்ணைப் பள்ளிகளில் எழுத்தறிவைப் புகட்டுவதினும் எண்ணறிவைப் புகட்டுவதிலேயே மிகுந்த அக்கறை காட்டப் பெற்றது. ஆனால், கதிரேசனார் ஆர்வம் எழுத்தறிவில் மிக ஈடுபாடு உடையதாயிற்று. ஏழு மாதக் கல்வியிலேயே தமிழின் அடிப்படையாக அமைந்த நூல்களின் அழகிலே தோய்ந்து கற்றார். மேலும் அதனை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்தையும் அத் திண்ணைப் பள்ளியில் கற்ற கல்வி தூண்டியது. அந்த ஆர்வம் செல்வம் சேர்ப்பதற்காகவோ, அலுவலை நாடுவதற்காகவோ ஏற்பட்டது இல்லை. அதனையும் கதிரேசனார் குறிப்பிடுகின்றார்.

"செய்யுளின் அழகிலே, அது தரும் இன்பத்திலே ஈடுபட்டே யான் கலைகளைப் பயின்றேன் அல்லது, பொருட்பேறு அடைதற்குக் கல்வி ஒரு சாதனம் ஆம் என்று கருதியாதல் (கருதியாவது) புகழ்பெற வேண்டும் என்றாதல் (என்றாவது) யான் கலை பயின்றேன் இல்லை."

தன வணிகர்கள், தம் மக்களை இளையராக இருக்கும் போதே கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்து பொருள் தேடுவதற்குப் பழக்கப்படுத்துவர். அவ்வகையில் கதிரேசனார் பெற்றோரும் அவரை வாணிகத்திற்காக இலங்கைக்கு அனுப்பினர். அப்பொழுது அவர் வயது பதினொன்றே.

இலங்கைக்குச் சென்ற கதிரேசனார் தோட்டத் தொழிலாளர் களுக்கு அரிசி, புடைவை முதலியன விற்கும் வணிக நிலையம் ஒன்றில் பணி செய்தார். பணியின் இடையே பைந்தமிழ் நூல் களையும் கற்றார்; இயற்கைக் காட்சிகளிலே ஈடுபட்டு இன்புற்றார்.