உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

யாழ்ப்பாணத்தில் இருந்த தமிழன்பர்களுடன் உறவாடி மகிழ்ந்தார். இந்நிலையில் இளமையில் வந்த வாத நோய் படிப்படியே வளர்ந்து வரலாயிற்று. உடல் நோய் வலுத்தது போதாது என்று, அன்புத் தந்தை முத்துக் கருப்பன் செட்டியார் இயற்கை எய்தினார் என்னும் செய்தி வந்து உளநோயையும் ஊட்டிற்று. அதனால் கதிரேசனார் தம் பதினான்காம் வயதில் இலங்கையில் செய்து கொண்டிருந்த வாணிகப் பணியை முடித்துக்கொண்டு தமிழகம் வந்து சேர்ந்தார்.

இளங்காளைப் பருவத்திலேயே கதிரேசனாரின் இடக்காலும் இடக்கையும் செயலற்று வலுவிழந்து போயின. தமிழ்மொழிக்கும் சிவநெறிக்கும் ஊன்றுகோல் போலாக வந்த கதிரேசனார், ஊன்றுகோல் இல்லாமல் நடக்க முடியாத நிலைமைக்கு ஆட்பட்டார். என்றும் இருக்கும் இனிய தமிழன்னையின் திருமடியிலே, என்றும் இருக்கும் சிறப்புப் பெறுவதற்காகத்தான் கதிரேசனார்க்கு இவ்விருப்பு நிலை அமைந்தது போலும்!

ம்

கதிரேசனார் கல்வியிலேயே கருத்தூன்றினார். அன்னை சிவப்பி ஆச்சியாரும் தம் மைந்தன் பெறும் கல்வியையே தாம் பெறும் அழியாச் செல்வமாகக் கருதினார். இளம் பருவந் தொட்டே கதிரேசனார் இல்லம் புலவர்களின் உறைவிடமாகத் திகழ்ந்தது. அதற்குக் காரணம் கதிரேசனாராக மட்டும் இருத்தற்கு யலுமா? அறிவுடையாரைப் போற்றுதலில் அன்னையார் கொண்டிருந்த ஆர்வமும் காரணமாம். அதனால், "கல்வி தனம் மிக்க கதிரேசன்" என்று பெரும் புலவர் அரசஞ் சண்முகனாரால் பாராட்டும் சிறப்புப் பெற்றார் கதிரேசனார்.

கதிரேசனார் அகலக் கல்வியைக் காட்டிலும் ஆழக் கல்வியைப் போற்றினார். அரிய நூல்களைத் தேர்ந்து தேர்ந்து கற்றார். அவ்வகையில் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம், திருவாசகம், திருக்குறள், அகநானூறு, புறநானூறு, கம்பராமாயணம் என்பவை குறிப்பிடத்தக்கவை. அகல உழுவதினும் ஆழ உழுவது மேல்" என்பது தமிழ்ப் பழமொழி அல்லவா!

66

இலக்கியங்களைத் தாமே கற்றுத் தேர்ந்த தனி மேதை கதிரேசனார். ஆயினும் அவர் உள்ளம் இலக்கணம் செவ்வையாகக் கற்றுத் தெளிவதற்கு ஓர் ஆசிரியர் வேண்டும் என விரும்பியது! ஆம்! இலக்கணம், மெய்ப்பொருள்,பிறமொழி ஆகியவற்றைக் குருவின்வழி கற்பதே குறையிலா நிறைவாக அமையும். அதனைத்