உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 1

21

ஓய்வு பெற்று மகிபாலன்பட்டிக்கு வந்து சேர்ந்தார். இறை மாட்சியே உள்ளத்தில் ஊன்றி நின்றது; திருவாசகத் திலேயே அழுந்தி நின்றது; அதன் பயனாகக் கதிர்மணிவிளக்கம் ஒளி செய்தது. பின்னர் அவ்வொளி விளக்கம் ஒளியருளிய ஒளியுடன் ஒன்றி நிற்பதைக் கருதி அழுந்தி நின்றது. 1953 அக்டோபர்த் திங்கள் இருபத்து நான்காம் நாள் கதிரொளி பேரொளிப் பிழம்புடன் கலந்து ஒன்றுபட்டது. அவ்வொளிக் கொரு திருவுருவச் சிலை 3- 4-1974 இல் மகிபாலன்பட்டியில் நிறுவப் பெற்றது. அவர் ஒளியுருவோ தமிழன்பர் உள்ளத்து அணையாச் சுடர் ஆயிற்று! என்றும் அது நின்று நிலவும்!

சில சுவையான நிகழ்ச்சிகள்

ஒரு கூட்டம் நடந்த இடத்தில் பலர் கூடியிருந்தனர். அவர்கள் பேசிக்கொண்டே இருந்தனர். அமைதியாக இருக்குமாறு பன்முறை வேண்டியும் அவர்கள் பேச்சு ஓயவில்லை. அதைக் கண்ட பண்டிதமணி, 'பெண்மணிகள் ஒலித்துக் கொண்டுதாமிருக்கும்' என்று கூறினார். கூட்டத்தில் சிரிப்பொலி

.

எழுந்தது.

நண்பர் ஒருவர் வீட்டில் பண்டிதமணி பருகுதற்குப் பால் வழங்கினர். பால் குவளையைக் கையில் வாங்கிய பண்டிதமணி, திருப்பாற்கடலில் சீனிவாசன் துயில் கொள்ளுகிறார் என்றார். ஆங்கிருந்தோர்க்கும் நண்பர்க்கும் பண்டிதமணி கூறியது புரியவில்லை. பாலில் ஓர் எறும்பு கிடந்தது. சீனியில் வாசம் செய்யும் எறும்பு 'சீனிவாசன்' தானே! பாற்கடலில் பள்ளி கொண்ட சீனிவாசனை, பால்குவளையில் கிடந்த சீனிவாசனுடன் ணைத்து இருபொருள் நயம்படக் கூறிப் பாற்சுவைக்கு மேற்சுவைப் படுத்தினார் பண்டிதமணி.

கரந்தையில் ஒரு விருந்து நடைபெற்றது. அவ்விருந்தில் புலவர் வரதநஞ்சைய பிள்ளை 'ரசம்' சாப்பிடும் போது இருமினார். அதனைக் கண்ட பண்டிதமணி. 'ரசம் அதிகாரமோ?' என்றார். 'ரசம்' அதிக காரமோ? எனவும் அதிகாரத்தோடு அவரை அழைக்கிறீர்களோ? எனவும் இருபொருள் தருகின்றது அல்லவா!

தூத்துக்குடியில் பண்டிதமணியின் தலைமையில் புலவர் ஒருவர் பேசினார். அவர் 'தேவாதி தேவர்கள் எல்லாரும் வந்தனர்; அவர்களில் முருகன்தான் பெரியவனாக இருந்தான்' என்றார். அதனைப் பண்டிதமணி, 'பரமேசுவரன் பார்வதி முதலிய தேவர்கள்