உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

எல்லாரும் வந்திருந்தார்களாம். முருகன் எல்லார்க்கும் மேலாக இருந்தானாம். ஆமாம், பெரிய கூட்டம். முருகன் ஒரு குழந்தை. ஆதலால் பரமேசுவரன் குழந்தையைத் தோள்மேல் தூக்கி வைத்திருந்திருப்பார். முருகன் எல்லார்க்கும் பெரியவனாகக் காட்சி கொடுத்திருப்பான்" என்றார்.

ஒருமுறை ஒருவர் பெண்கள் கூட்டத்தைப் பார்த்து, “நீங்கள் உங்கள் கணவன்மார்களின் எச்சில் உணவை உண்கிறீர்களே! இம் மூடப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள்" என்று உரக்கக் கூறினார். அக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பண்டிதமணி, "இந்தத் தவறான பழக்கத்தை நீங்கள் விட்டு விட்டால் மட்டும் போதாது. எத்தனை ஆண்டுகளாக அவ்வாறு உண்டு வந்தீர்களோ, அவ்வளவு காலமாவது உங்கள் எச்சிலையும் உங்கள் கணவன்மார்களை உண்ணச் செய்து பழிக்குப்பழி வாங்கினால்தான் என்மனம் அமைதி அடையும்" என்றார்.

நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் பண்டிதமணி அவர்களைத் திருக்கற்குடிக் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அப்பொழுது கோயிலில் வழி கூட்டி அழைத்துச் செல்லும்போது "படி இல்லை" என்று சொல்லிக் கொண்டே வந்தார். பண்டிதமணி, "இறைவன் திருமுன்வந்து 'படியில்லை' என்று சொல்லாதீர்கள்; இறைவன்தானே எல்லார்க்கும் படியளப்பவன்' என்று கூறினார்.

“கம்பர் யார்?" என்று ஒரு வினா தமிழகத்தில் எழுந்தது. அப்பொழுது பண்டிதமணி அவர்கள் டிதமணி அவர்கள் "கம்பை உடையவன் கம்பன்; அவ்வகையில் பார்க்கும்போது யானே கம்பன்" என்றார். அவர் கம்பின் துணையால் உலா வந்தவர் அல்லரோ!

பண்டிதமணி இளமையிலே திருக்குறள் முழுவதையும் மனப்பாடம் செய்திருந்தார். அதனைச் சரியாக ஒப்பித்துச் சரிபார்ப்பதற்காக அன்பர் ஒருவரை ஏற்பாடு செய்தார். அவரிடம் "நான் சொல்வதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். எதுவும் பிழை கண்டால் நறுக்கென்று குட்டிவிடுங்கள். நட்பு முறையில் இரக்கம் காட்ட வேண்டா. நன்றாகவே குட்டி விடுங்கள்" என்றார். பின், முதற் குறளை,

66

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"