உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 1

23

என்று ஒப்பித்தார். ஒப்பிக்கு முன்னரே நண்பர் நறுக்கென்று நன்றாக ஒரு 'குட்டுப் போட்டார். பண்டிதமணி திகைத்துப்போய்

தில் என்ன ஐயா பிழை? ஏன் குட்டினீர்?" என்று வினவினார். அதற்கு அவர், "அகர முதல வெழுத் தெல்லாம் என்று புத்தகத்தில் இருக்கிறது. 'வெழுத் தெல்லாம்' என்பதை 'எழுத் தெல்லாம்’ என்று கூறியதால் குட்டினேன்" என்றார். பண்டிதமணி நகைப்புடன், "உங்களிடம் ஒப்பித்தால் 1330 குறளுக்கும் 1330 குட்டு வாங்க வேண்டும். அதற்கு என் தலை தாங்காது" என்று சொல்லி மேலும் ஒப்பித்தலை நிறுத்திக் கொண்டார்.

காரைக்குடியில் ஒரு விழா நடைபெற்றது. அவ்விழாவுக்குப் பண்டிதமணி வந்தார். அவர் வருதற்கு ஏற்பாடு செய்யப் பெற்றிருந்த உந்துவண்டி (கார்) இடைவழியில் பழுதுபட்டு ஒருமணிநேரம் காருக்குள் தங்க நேரிட்டது. அப்பொழுது பண்டிதமணி பாட்டொன்று பாடினார்:

“காட்டானை போலக் கதறிக் கிளம்புகின்ற மோட்டாரை நம்புவதும் மோசம்தான்-”

இதற்குக் 'கார்' பதிலுரைக்கின்றது!

"பாட்டாய்கேள்!

காரைக் குடிநகரைக் காணவிழைந் தாயன்றோ!

""

காரைக் குடியாகக் காண்.'