உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பேரறிஞர் பரிதிமால் கலைஞர்

சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் மில்லர் என்னும் பெயருடைய ஒரு துரைமகனார் தலைவராக இருந்தார். அவர் ஒருநாள் 'தெனிசன்' என்னும் ஆங்கிலக் கவிஞர் இயற்றிய ஒரு பாடலைச் சுவையாக நடத்தினார். ஒரு படகைப் பற்றியது அப் பாட்டு.

(C

"ஒரு படகு, இருபக்கங்களிலும் துடுப்புகளால் தள்ள நீரில் மிதந்து செல்கின்றது. அஃது, ஓர் அன்னம் தன் இரு சிறகுகளையும் வீசி அழகாகப் பறந்து செல்வதுபோல் உள்ளது" என்று வருணிக்கப்பட்டிருந்தது.

என

அப் பாட்டை இனிமையாக நடத்திய மில்லர், இத்தகைய வருணனை பிறமொழிப் பாடல்களில் உண்டோ? ஐயமுற்றார். அதனால் தமிழ் இலக்கியத்தில் இத்தகைய செய்தி உண்டா? என வகுப்பில் பொதுவாக வினாவினார். அனைவரும் அமைதியாக இருந்தபோது ஓர் இளைஞர் எழுந்து,

"முடுகின நெடுவாவாய் முரிதிரை நெடுநீர்வாய் கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்'

""

எனக் கம்பராமாயணத்தில் இச்செய்தி வந்துள்ளது என்பதைக் கூறி விளக்கினார்.

தெனிசனுக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவன் கம்பன்.அவன் அப்பொழுதே இப்படிப் பாடியுள்ளான் எனப் பெருமிதத்துடன் இளைஞர் கூறினார். மில்லர் வியப் படைந்தார். இளைஞர் அறிவாற்றலையும், துணிவையும் வியந்து பாராட்டினார். அந்த மாணவர் பட்டம் பெற்றதும் அக் கல்லூரியிலேயே பணிபுரியும் வாய்ப்பும் தந்தார். அம் மாணவர் யாவர்? அவரே வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர் ஆவர்.