உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊரும் பேரும்:

பாண்டிநாட்டுப் புலவர்கள்-1

25

மதுரை மாநகரை அடுத்துள்ள ஓர் ஊர் விளாச்சேரி. அவ்வூரில் கோவிந்த சிவனார் என்றொரு பெருமகனார் இருந்தார். அவர் தம் அருமைத் திருமகனாக 6-7-1870இல் தோன்றினார் சூரிய நாராயண சாத்திரியார். வி.கோ. என்பது விளாச்சேரியையும் கோவிந்த சிவனாரையும் குறிப்பன ஆகும்.

கோவிந்தசிவனார் பேரறிஞர், வடமொழிப் புலமை நிரம்பியவர்; சைவசித்தாந்த ஆராய்ச்சி மிக்கவர். யோகப் பயிற்சியுடையவர்; தம்மை அடுத்து வந்தவர்க்குக் கனிவுடன் கற்பிக்கும் கடமை புரிந்தவர். இத்தகையவரின் மைந்தர் அறிவுச் சிறப்பை சொல்லவும் வேண்டுமோ?

கல்விப் பயிற்சி :

சாத்திரியார் இளமையில் தம் தந்தையாரிடமே கற்க வேண்டுவன எல்லாம் கற்றார். பத்தாம் வயதில் பசுமலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். அப்பொழுதே சிலம்பம், மற்போர் ஆகிய பயிற்சிகளிலும் விளையாட்டிலும் ஆர்வமாக ஈடுபட்டார். அதன்பின் மதுரை மாவட்ட உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பள்ளியிறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர், மதுரைக் கல்லூரியில் எப்.ஏ. வகுப்பில் சேர்ந்து சிறப்பாக வெற்றி பெற்றார். தமிழ்க் கல்வி

உயர்நிலைப்

பள்ளியில் படிக்கும்போதே சாத்திரி யார்க்குத் தமிழ்மொழியின்மேல் தணியாத அன்பு உண்டாயிற்று. அதன் இலக்கிய இலக்கணங்களைக் கற்க விரும்பினார். அவர் விருப்பத்தை அறிந்த தந்தையார், பெரும் பேராசிரியர் சபாபதி முதலியார் அவர்களிடம் தனியே தமிழ்ப்பயிற்சி பெற ஏற்பாடு செய்தார்.

முதலியார் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிப் புலமையாளர். கணக்கு, தத்துவம் ஆகியவற்றிலும் தேர்ந்தவர்; பழுத்த பேராசிரியர்; பெரும் பாவலர்; நாவலர்; இவரிடம் 1885 முதல் 1890 வரை ஐந்தாண்டுகள் சாத்திரியார் தமிழ் கற்றார். அக்கல்வி அவர்தம் பிற்காலத்தில் இணையில்லாப் பெருமை தந்தது. படிக்கும் காலத்திலேயே 'மாலா பஞ்சகம்' என்றொரு நூல் இயற்றியமை குறிப்பிடத்தக்கதாம்.