உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

பட்டப் படிப்பு :

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

சாத்திரியார் மேற்கல்வி கற்க விரும்பினார். தந்தையாரும் இசைந்தார். அதனால் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார்; தமிழ்க் கல்வி இவர்க்கு எளிது ஆயிற்று. உடன் பயின்ற மாணவர்க்கு இவரே தமிழ் கற்பித்தார். ஆங்கிலம் கற்பதிலும், தத்துவ நூல்களை ஆராய்வதிலும் மிக ஈடுபட்டார். கற்றுக் கொண்டிருக்கும் காலத்திலேயே கட்டுரைகள் எழுதி இதழ்களில் வெளியிட்டார். 1892இல் இளங்கலைத் தேர்வில் (B.A.) தமிழில் முதன்மை பெற்றதற்காகப் 'பாற்கர சேதுபதியின்' பொற்பதக்கம் இவருக்குப் பரிசாகக் கிடைத்தது.

திராவிட சாத்திரி :

அந்நாளில் சென்னையில் சி. வை. தாமோதரம் பிள்ளை என்னும் பேரறிஞர் ஒருவர் இருந்தார். அவர் சாத்திரியாரின் தமிழ்மொழிப் புலமையைக் கேள்விப்பட்டார். ஒருநாள் அவரை அழைத்து உரையாடினார். சாத்திரியார் பேசிய தூய தமிழ் நடையையும், தமிழ்மொழித் தேர்ச்சியையும் அறிந்து மகிழ்ந்தார்.

ஒருமணிப் பொழுதில் எழுதுவதற்குத் தக்க வகையில் ஒரு தமிழ்த்தேர்வு வைத்தார். அதனை அரைமணிப் பொழுதில் அருமையாக எழுதி முடித்தார் சாத்திரியார். இவர்தம் புலமையை நன்கு அறிந்து கொண்ட தாமோதரனார் இவரைத் 'திராவிட சாத்திரி' என்று பாராட்டினார். தாம் பதிப்பித்த நூல்களில் ஒவ்வொன்று அன்பளிப்பாக வழங்கினார். அதன் பின்னர் இவ்விருவர் நட்பும் வளர்பிறைபோல வளர்ந்தது.

ஆசிரியப் பணி:

மில்லர் துரைமகனார்க்குச் சாத்திரியாரின்மேல் அளவற்ற அன்பு இருந்தது. அதனால் தம் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக அமர்த்த விரும்பினார். ஆனால், சாத்திரியார் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றவே விரும்பினார். மில்லரும் அதற்கு இசைந்து அவ்வாறே செய்தார். சாத்திரியார் கொண்ட தமிழ்ப்பற்றுக்கு இந்நிகழ்ச்சி ஒரு சிறந்த சான்று அன்றோ? பரிதிமால் கலைஞர் :

சாத்திரியாரின் தமிழ்பற்றுக்குப் பல சான்றுகள் உண்டு. அவற்றுள் தலையாய ஒன்று 'சூரிய நாராயண சாத்திரியார்

"