உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் 1

27

என்னும் பெயரைத் தனித் தமிழில் 'பரிதிமால் கலைஞர்' என மாற்றிக் கொண்டதே ஆகும். (சூரியன்-பரிதி; நாராயணன்-மால்; சாத்திரி-கலைஞர்.)

பல திறத் தொண்டுகள்:

பரிதியார் கிறித்தவக் கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் போது கல்லூரிப் பணிகளைக் செவ்வையாகச் செய்தார். மாணவர் பாராட்டுமாறு வகுப்பு நடத்தினார்; கல்லூரி ஆசிரியர்கள் புகழுமாறு கடமை புரிந்தார். வகுப்பு அளவில் தமிழ் பயிற்றுவதை நிறுத்திவிடாமல் வீட்டிலும் தமிழ் ஆர்வம் உடையவர்க்குக் கற்பித்தார். தம் வாழ்வையே தமிழ் வாழ்வாக்கிக் கொண்டார்.

கிறித்தவக் கல்லூரியில் 'தமிழ் மொழி முன்னேற்றச் சங்கம்’ ஒன்றை நிறுவினார். பொதுமக்களுக்குத் தமிழ்த் தொண்டு செய்வதற்காகத் 'திராவிட பாசர சங்கம்' என ஒரு சங்கத்தையும் தொடங்கினார். ஆங்காங்கு அரிய பொருள்களைக் குறித்துச் சொற்பொழிவு ஆற்றினார். சிறந்த கட்டுரைகளை எழுதிச் செய்தித் தாள்களில் வெளிப்படுத்தினார். பல்கலைக் கழகத் தேர்வாளராக இருந்தும் பணி செய்தார்.

பல்வேறு ஆசிரிய நிலை :

பரிதியார் 'போதக ஆசிரியர்' என்னும் பொறுப்பில் ருந்தால் கூட, நூலாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், இதழாசிரியராகவும், நாடக ஆசிரியராகவும் சிறந்து விளங்கினார்.

ளமையிலேயே 'மாலா பஞ்சகம்' என்னும் நூலை இயற்றியதை முன்னே அறிந்தோம். மேலும் 'ரூபாவதி”, 'கலாவதி', 'மானவிசயம்' என்னும் நாடக நூல்களை இயற்றினார். பல வேளைகளில் பல பொருள்களைப் பற்றிப் பாடிய பாடல்களைத், 'தனிப் பாசுரத் தொகை' என ஒரு நூலாக்கினார். இதனை மேல்நாட்டுத் தமிழ்ப் பேரறிஞர் போப்பையர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'பாவலர் விருந்து' என்னும் நூல் பரிதியார் பல்வேறு சமயங்களில் பாடிய பாடல்களின் ஒரு தொகுப்பு நூலாகும். இவையன்றித் தமிழ்மொழி வரலாறு என்னும் ஓர் அரிய நூலையும், நாடக இயல், மதிவாணன், மணியசிவனார் சரித்திரம் என்பவற்றையும் இயற்றினார்.

பரிதியார் தாம் இயற்றிய நூல்களையும், பிறர் இயற்றிய நூல் களையும் தாம் பதிப்பித்து வெளியிடும் பணியையும் மேற் கொண்டார். அவ் வகையில் நாடக நூல்களை 'நாமகள் சிலம்பு'