உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

சில சுவையான நிகழ்ச்சிகள்

எழுவாய், பயனிலை:

பரிதியார் வகுப்பு எப்பொழுதும் எல்லாரும் விரும்பத் தக்கதாகவே இருக்கும். ஒருநாள் ஒரு மாணவன் வகுப்பில் கருத்தின்றி இருந்தான். அவன் நிலையை அறிந்தார் பரிதியார். “நீ இவண் இருந்து 'எழுவாய்'! இவண் இருத்தலால் 'பயனிலை'! நீ செல்ல வேண்டியதே 'செயப்படு பொருள்'!" என்று எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்னும் இலக்கணச் சொற் களாலேயே மட்டம் தட்டினார்.

தாமரைக் கண் :

ஒருநாள் சீவக சிந்தாமணிப் பாடல் ஒன்றை விரிவாக எடுத்துரைத்தார். அப்பாட்டில் சீவகனைக் கண்ட மாதர்,

“தாமரைக் கணால் பருக

95

என்னும் தொடர் வந்தது. அதனைத் தாமரை போன்ற கண்ணால் பார்த்தனர் என்று ஒரு பொருள் கூறினார். பின்னர், தா மரை எனப் பிரித்துத் தாவும் மான் கண் போன்ற கண்ணால் பார்த்தனர் என்று வேறொரு பொருள் கூறினார். பிறகு சற்றே நிறுத்தி, சீவக பேரழகுடைய ஆடவன். ஆதலால், மகளிர் நேரே பார்க்க நாணித் 'தாம் அரைக் கண்ணால்' நோக்கினார் என்று கூறினார். வகுப்பே ஒரே மகிழ்ச்சி ஆரவாரம் உடையதாயிற்று.

தேனிசையன் :

தமிழ் இலக்கியத்தைப் போலவே ஆங்கில இலக்கியத்திலும் பரிதியார்க்கு மிக ஈடுபாடு உண்டு. ஆங்கிலக் கவிஞருள் 'தெனிசன்'என்பார் கவிதைகளில் பரிதியார்க்குச் சிறந்த பற்று இருந்தது. அதனால் 'தெனிசன்' என்னும் பெயரைத் 'தேனிசையன்' என உள்ளர்ந்த அன்போடு உரைப்பார் பரிதியார்.

பெயரை மாற்றுதல்:

பரிதியார் கிறித்தவக் கல்லூரி மாணவராக இருந்த போது ஒருநாள் மில்லர் பெருமகனார் "சூரிய நாராயணன் என்னும் உன் பெயரைச் சொல்ல எனக்குக் கடினமாக உள்ளது. உன் பெயரை மாற்றிக் கொள்ளலாமே" என்றார். "சரி! அப்படியே மாற்றிக் கொள்கிறேன்" என்றார் பரிதியார். மறுநாள் பெயர்ப் பதிவேட்டில் பெயர் மாற்றப்பட்டிருந்தது. அதனை வியப்போடு பார்த்த மில்லர்