உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 1

31

பெருந்திகைப்பு அடைந்தார். ஏன்? 'சூரிய நாராயண சாத்திரி' எனப் பெயர் இருந்தது! திகைப்பு வராமல் என்ன செய்யும்? பரிதியார் ஏற்றுக் கொண்டவாறு செய்யாமல் தவறு செய்தாரா? இல்லையே; பெயரை மாற்றிக் கொண்டாரா இல்லையா?

பரிதியாரின் செம்மை :

பரிதியார் சென்னையில் படிக்கும்போது, தங்கசாலைத் தெருவில் செங்கல்வராய முதலியார் என்பவர் வீட்டில் குடியிருந்தார். அச் செங்கல்வராய முதலியார் மைந்தர் சரவண முதலியார் என்பவர். அவர், பரிதியார் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியரானபோது அக் கல்லூரியிலே பயின்றார். பரிதியாரிடம் தமிழ்ப்பாடம் தனியேயும் கற்றார். தமிழ் ஆர்வமும் புலமையும் மிகவுடையவர். அவர் இளங்கலைத் (பி.ஏ.) தேர்வுக்குச் செல்லும் ஆண்டு, பரிதியாரே தேர்வாளராகவும் இருந்தார். இதனால், "இவ்வாண்டு சரவண முதலியாரே தமிழில் முதன்மை பெறுவார்" என்று பலரும் எண்ணினர். சிலர் பேசவும் தொடங்கினர். இச் செய்தி பரிதியின் செவிக்கு எட்டியது. உடனே "இவ்வாண்டு எனக்குத் தேர்வாளர் பதவி வேண்டா" என்று பல்கலைக் கழகத்திற்கு எழுதிவிட்டார். வருவாய் மிக்க அப் பொறுப்பை எவராவது விடுவரா? மில்லர்கூட "நாங்கள் குறை சொன்னால் அல்லவா நீவிர் கவலைப் படவேண்டும்? உம் நேர்மையை நாங்கள் அறிவோமே" என்று மறுத்துக் கூறினார். ஆனால். பரிதியார் தம் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அவ்வாண்டு கும்பகோணம் ணம் கல்லூரியில் பேராசிரியராக இருந்த டாக்டர். உ.வே.சாமிநாதையர் அவர்கள் தேர்வாளராக அமர்ந்தார். அப்பொழுது, சரவண முதலியாரே தமிழில் முதன்மை பெற்றார். பரிதியாரின் செம்மைக்கு வேறு சான்றும் வேண்டுமோ?

று

பரிதிமால் கலைஞரைப் பற்றிய ஓர் ஓவியம்

'வி.கோ.சூரியநாராயண சாத்திரியார் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராய் இருந்தவர். அக்காலத்தில் யான் வெசிலி கல்லூரியில் மாணாக்கனாய் இருந்தேன். அதனால் சாத்திரியாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றேன் இல்லை. ஆனால் என் கண்கள்மட்டும் அவரைக் காணும் பேறு பெற்றன."

"சூரிய நாராயண சாத்திரியாரிடத்தில் சிறந்து விளங்கிய இயல்புகள் பல உண்டு. அவைகளுள் சிறந்தது எங்கும் எப்பொழுதும்