உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

எக்காரணம் பற்றியும் கொச்சைத் தமிழ் பேசாமை. சாத்திரியாரால் இயற்றப்பட்ட நூல்கள் தமிழ் அன்னையின் அணிகள். அவைகளுள் ஒன்று 'தமிழ்மொழி வரலாறு' தமிழ் நாட்டில் தாய் மொழி வரலாற்றுக்கு வழி காட்டியவர் சூரிய நாராயண சாத்திரியார் என்னும் பரிதிமாற் கலைஞரே. அவர் நீண்ட நாள் உலகில் வாழ்ந்திருந்தால் தமிழ் அன்னை இழந்த அரியாசனத்தில் அமர்ந்திருப்பாள். முத்தமிழும் ஆக்கம் பெற்றிருக்கும்.

தமிழ்த் தென்றல் திரு. வி. கலியாண சுந்தரனார்.