உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

விற்றார்; கவலையைத் தீர்த்தார்; கல்வியைத் தொடர்ந்தார். சட்டக் கல்லூரித் தேர்வை (பி.எல்.) எழுதினார்.

தேர்வு முடிவு தெரியும்வரை பணியின்றி இருப்பதற்குக் குடும்பச் சூழ்நிலை விடவில்லை. அதனால் வருவாய்த் துறை அலுவலகம் ஒன்றில் எழுத்தராகப் பணி செய்தார்.சட்டப் படிப்பின் முடிவு அறிவிக்கப் பெற்றதும் அவ் வேலையில் இருந்து விலகி வழக்கறிஞர் தொழிலை நடத்தத் தொடங்கினார்.

வழக்கறிஞர் தொழிலில் முதலாவதாக ஈடுபடுபவர்கள், பெயர் பெற்ற வழக்கறிஞர்களிடம் சில ஆண்டுகள் பயிற்சி பெறுவது வழக்கம். அதன் பின்னரே தனியே வழக்குகளை எடுத்து நடத்துவர். ஆனால், நாவலர் பாரதியார் அவ்வாறு செய்தாரல்லர். மிகவும் துணிச்சலாகத் தாமே வழக்குகளை எடுத்துக்கொண்டு நடத்தத் தொடங்கினார். தம்மேல் அவர்க்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை வீண்படா வண்ணம் எடுத்த வழக்குகளில் எல்லாம் வெற்றி கொண்டார். ஓரொரு வேளை தோற்றுப் போயினும்கூட எதிர் வழக்கறிஞர் களைத் திணற வைத்தார். அதனால் பலரும் நாவலர் பாரதி யாரிடம் வந்து தம் வழக்குகளை எடுத்து நடத்த வேண்டினர்.

பணமே குறியாக எந்த வழக்கையும் நாவலர் ஏற்றுக் கொள்வது இல்லை. பொய் வழக்குகளை எவர் சொன்னாலும், எவ்வளவு தொகை கிடைத்தாலும் எடுத்துக் கொள்ள மறுத்து விடுவார். குறைந்த எண்ணிக்கையான வழக்குகளையே எடுத்துக் கொண்டு தெளிவாக ஆராய்வார். குறையாத அளவு பணமும் பெறுவார். ஏற்றுக் கொண்ட வழக்குக்காக இவர் எடுத்துக் கொள்ளும் உழைப்பு கட்சிக்காரர் எவருக்கும் நிறைவு தராமல் போகாது. இவையே நாவலர் பாரதியார் செய்த வழக்கறிஞர் தொழிலின் வெற்றிக்கு அடிப்படைகளாம்.

நாவலர் 1905ஆம் ஆண்டு முதல் 1920ஆம் ஆண்டு வரை தூத்துக்குடியிலே இருந்து பணி செய்தார். அதன் பின்னர்த் தம்மிடம் வழக்குக்காக வரக்கூடியவர்களுள் பெரும்பாலோர் நாட்டுக் கோட்டையைச் சேர்ந்தவர்களாக இருப்பதை அறிந்து தம் இருப்பிடத்தை மதுரையை அடுத்துள்ள பசுமலைக்கு மாற்றிக்

கொண்டார்.

நாவலர்க்கு இளமையிலே அரும்பிய தமிழ்ப்பற்று நாளும் வளர்ந்து கொண்டே வந்தது. அதனால் தமிழைக் கற்கும் வாய்ப்பாக முதுகலைத் தேர்வுக்கு (எம்.ஏ.)ச் சென்றார். அப்பொழுது