உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

தொப்பிகளைக் கழற்றி வைப்பதற்கு ஒரு தாங்கி இருந்தது. அதில் இந்தியர் எவரும் தலைப்பாகையைக் கழற்றி வைத்தல் கூடாது என்பது அது. நாவலருக்கு இது பிடிக்கவில்லை. வேலைக்கு வந்த மறுநாளே தம் தலைப்பாகையை அத் தாங்கியில் வைத்தார். ஆங்கிலேயர் எதிர்த்தனர். மேலதிகாரியிடம் குறை கூறினர். நாவலர் உறுதியாக வாதாடினார். "அவர் செய்தது சரிதான்! தவறில்லை" எனக் கூறினார் மேலதிகாரி. இது நாவலரின் துணிவின் வெற்றி ஆயிற்று.

தட்டச்சு:

நாவலரின் இச் செயல் ஆங்கிலவர்க்கு வெறுப்பை உண்டாக்கிற்று. அதற்கு மேலும் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அவ்வலுவலகத்தில் ஆங்கில இந்திய மகளிர் தட்டச்சாளராக இருந்தனர்.அவர்களிடம் ஏதாவது விளக்கம் தர நேரிட்டவர் ஆங்கிலேயராக இருந்தால் அறைக்கு உள்ளே சென்று சொல்லலாம். இந்தியராயின் அறைக்கு வெளியே இருந்து பலகணி வழியாகவே பேச வேண்டும் என்பது வழக்கமாக இருந்தது. இதனை வெறுத்த நாவலர் அறைக்கு உள்ளே நுழைந்தார். “இது தவறு' எனத் தடுத்தனர். "அவ்வாறாயின் அப் பெண் என் அறைக்கு வந்து விளக்கம் கேட்டுக் கொள்ளலாம்" எனத் தாம் செல்ல மறுத்துவிட்டார். இச் செய்தி உயர் அலுவலர்க்குப் போனது. "பெண்களை இழிவு படுத்தும் நிலையில் உம்மைப் போன்ற படித்தவர் பேசலாமா?' என உயர் அலுவலர் நாவலரை வினாவினார். உண்மையை விளக்கினார் நாவலர். உண்மையுணர்ந்த உயர் அலுவலர் இனி எவரும் அறைக்குள்ளே புகாமல் பலகணி வழியாகவே பேசுதல் வேண்டும் என்று ஆணையிட்டார். இது நாவலர் பெற்ற இரண்டாம் வெற்றி ஆயிற்று.

நாற்காலி:

ஒரு நீதி மன்றத்தில் நாவலர் வழக்காடச் சென்றார். அங்கே மாவட்டத் துணைக் காவலர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு சான்று கூறினார். அதனைக் கண்ட நாவலர் தாமும் அமர்ந்துகொண்டு வினாவினார். நீதிமன்ற நடைமுறைக்கு மாறுபட்ட செய்தி இது! உடல் நலம் இல்லாத வேளையில் மட்டுமே நீதிமன்றத் தலைவரின் இசைவுடன் வழக்கறிஞர் அமரலாம். அதனால், 'உமக்கு உடல் நலமில்லையா?" என மன்றத் தலைவர் நாவலரை வினாவினார். "நான் நன்றாகவே இருக்கிறேன்;