உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 1

41

வருக்குத் தான் நலமில்லை" என்று துணைக் காவலரைச் சுட்டிக் காட்டினார். நாணிய துணைக் காவலர் 'நான் நன்றாகவே இருக்கிறேன்' என்று கூறி எழுந்தார். எழுந்ததும் நாற்காலியை அகற்றச் செய்துவிட்டுத் தாமும் நின்று வழக்காடினார். அறத்தின் முன் அனைவரும் ஒப்பானவரே என்பது நாவலரால் விளக்கமாகக் காட்டப் பெற்றது அல்லவா!

சட்டை:

இன்னொரு வழக்கு மன்றத்திற்கு நாவலர் சென்றார். அம் மன்ற நடுவர் சட்டை கூடப் போடாமல் அமர்ந்திருந்தார். நாவலர் எல்லா உடைகளுடனும்தான் நீதிமன்றத்திற்கு வந்தார். ஆனால், நடுவரைக் கண்டதும் தாமும் சட்டையின்றி உள்ளே சென்றார். நடுவர் திகைத்துப் போய் "நீதி மன்றத்திற்கு வரும் முறை இது தானா? என்றார். "நீதிமன்றத்திற்கு வரும் முறையை நான் நன்கு அறிவேன். ஆயினும் தங்களைப் பார்த்ததும் இவ்வாறு

வருவதுதான் முறை என்பதை அறிந்து கொண்டேன்" என்றார் நாவலர் நடுவர் தம் உடைகளை அணிந்துகொண்டு அமர்ந்தார். நாவலரும் அவ்வாறே தம் உடைகளை அணிந்து கொண்டார். சட்டத்தைக் காக்க வேண்டியவரே காக்கத் தவறலாமா?

துண்டு:

நாவலர் பாரதியார், அமரகவி பாரதியார்க்கு ஒரு பட்டுத் துண்டை அன்புடன் வழங்கினார். அதனைப் போர்த்திக் கொண்டு உலாவப் போனார் பாரதியார். போன வழியில் ஒருவன் உடையின்றிக் கிடப்பதைக் கண்ட பாரதியார் அப் பட்டுத் துண்டை அவனுக்குப் போர்த்திவிட்டார்.

துண்டு இல்லாமல் வந்த பாரதியாரைக் கண்ட நாவலர் 'துண்டு எங்கே?' என வினாவினார். பாரதியார், 'இங்கே வா' என நாவலரை அழைத்துக் கொண்டு போய்த் தெருவில் உடையின்றிக் கிடந்தவனைச் சுட்டிக் காட்டினார். இச் செயலை உணர்ந்து உருகிய நாவலர் "பாரதி நன்றாக இருக்க வேண்டுமானால் இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும்" என்றார்.

கப்பல் :

வீரர் வ.உ.சி. தம்மிடம் மூன்று கப்பல்கள் இருப்பதாகக் கூறினார்."இரண்டு கப்பல்கள் தாமே உள்ளன. மூன்றாவது கப்பல் எங்கே?" என்று அதனைக் கேட்டவர் வினாவினார்.