உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

பள்ளியில் வெ.ப. சு. கற்ற கல்வி மிகுதியா? பள்ளிக்கு வெளியே தேடிக்கொண்ட கல்வி மிகுதியா? இரண்டுமே ஒன்றை ஒன்று விஞ்சுமாறு கற்றார். மாணவப் மாணவப் பருவத்திலேயே அறிவுடையார் பாராட்டும் அறிவு நலம் பெற்றார். ஆராய்ச்சி யாளராகவும், பாவலராகவும் விளங்கினார். பள்ளிப் படிப்புக் காகத்தானே பெற்றோர் வெ. ப. வை நெல்லையில் விடுத்திருந்தனர்? அப் பணி நிறைவேறிய பின்னர் ஆங்கிருக்க வேண்டியதென்ன? வெள்ளகாலுக்கு வந்தார். வேளாண்மையில் ஈடுபட்டார்.

சு.

ஈடுபடும் எந்த ஒன்றிலும் அரைகுறையாக ஈடுபடுதல் வெ.ப.சு.அறியாதது. ஆதலால் முழுமனத்துடன் வேளாண்மைக் கண்காணிப்பில் முனைந்தார். அதே பொழுதில் நெல்லையில் கற்றுவந்த அருந்தமிழ்க் கல்வியையும் நெடுகிலும் வளர்த்துக் கொண்டு வந்தார். "பாடம் ஏறினும் ஏடது கைவிடேல்" என்னும் நன்மொழியைப் போற்றி அவ்வழியில் நின்றார்.

நெல்லை இந்துக் கல்வி நிலையத்தில் வெ.ப.சு.வுடன் பயின்றவர் சிவஞானம் பிள்ளை என்பவர்; உடன்பயின்ற மாணவரை உயர்த்துவதில் ஆர்வம் உடையவர்; அவர் சென்னைக் கிறித்தவக் கல்லூரிக்குச் சென்று "எஃப்.ஏ."வகுப்பில் சேர்ந்தார். தம் இனிய நண்பர் வெ.ப.சு.வும் இங்குக் கற்க வருவார் எனக் கருதினார். வெ.ய.சு.வின் "நாட்டம் பட்டப்படிப்பிலே இல்லை; அரசுப் பணியிலேயும் இல்லை" என்பதை அறிந்தார். தம் நட்புரிமை காட்டி வற்புறுத்திக் கல்வி பயில வருமாறு அழைத்தார். கல்லூரி முதல்வர் மில்லர் பெருமகனாரிடம் 'எஃப். ஏ' வகுப்பிற்கு ஓரிடத்தை வாங்கிக் கொண்டு, "கட்டாயமாக வரவேண்டும்" என எழுதினார். நண்பர் உரையை மதித்துக் கிறித்தவக் கல்லூரி மாணவர் ஆனார் வெ.ப.சு.அப்பொழுது வகுப்புத் தொடங்கி ஆறு திங்கள் கடந்துவிட்டன.

.

ஆண்டு இறுதித் தேர்வு வந்தது. எல்லாம் புதிய பாடங்களாக இருந்தமையாலும், நெடுங்காலம் பாடங் கேட்காமையாலும் தேர்வில் தோல்வியுற்றார். முயன்று படித்து அடுத்ததேர்வுக்குச் சென்றார். அதிலும் தோல்வியே கண்டார். மேலும் தொடர விருப்பு இல்லாமல் வெள்ளகாலுக்கு வந்தார்.

எவ்வளவு செல்வ வாய்ப்பு உடையராயினும் அரசினர்பணி ஒன்றே அணிகலம் என்று பலரும் கருதி இருந்த காலம் அது. பழனியப்பரும் அதற்கு விலக்கானவர் அல்லர். ஆதலால்