உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

55

ருநாள் அடிகள் நாயுடுவையும் சிவஞானத்தையும் அழைத்தார்."எனக்கு ஆணை கிடைத்துவிட்டது. நாளைக் காலை ஞாயிறு தோன்றச் சிறிது முன்னர் 'சவாரி' போகின்றேன் என்றார். 'சவாரி' போவதென்ன? 'சமாதி அடையப் போகின்றேன்' என்பதையே அவ்வாறு கூறினார். "இவ்வளவு விரைவில் பிரிதல் கூடாது! இன்னும் சில காலமாவது இருத்தல் வேண்டும்" என வலியுறுத்தினர். அடிகள் தம் முடிவு, 'முடிவே' என்று உறுதி கூறினார்.சமாதி வைத்தற்கு உரிய முன்னேற்பாடுகளைச் செய்ய ஏவினார். அவராணையை மறுக்க அஞ்சி அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தனர்.

குறித்த பொழுதில் அடிகள் சமாதியானார். ஊர் எல்லாம் கூடி உருகி நின்றது. சமாதியைச் சுற்றிக் கோயில் எழுப்பி நாற்பதுநாள் வழிபாடு நிகழ்ந்தது. அப்பொழுது சிவஞானத்தின் அகவை பதினான்கே. அருளானந்த அடிகளை எண்ணி உள்ளம் உருகி ஒரு பாட்டிசைத்தான்:

ஊனே இல்லாத உலர்ந்த எலும்பு; அதனை ஒரு நாய் எடுத்துக் கடிக்கிறது. கடித்த கடியில் நாயின் பல்லின் அடியில் இருந்த எயிறு குத்தப்பட்டது. இரத்தம் எழுந்தது. அவ்விரத்தம் எலும்பில் இருந்து வந்ததாக எண்ணிச் சுவைத்தது நாய். அதுபோல், இல்வாழ்வு இன்பமே எனக் கருதித், துன்பமே இன்பமாகக் கொண்டவர் சொற்களை என் மனத்துக் கொள்ளேன்; பல்லட நகரில் வாழும் அருளானந்த அடிகளே நீவிர் என்னை ஆட்கொள்வீராக" என்பது இளைய சிவஞானத்தின் முதிய பாடலின் பொருளாகும்.

சிவஞானம் பல்லடத்தில் இருந்து வெலிங்டனுக்குச் சென்று ஒரு வணிகரிடம் வேலையில் அமர்ந்தான். ஓரிரு திங்கள் அளவே பணி செய்தான். பின்னர் உதகமண்டலம் சேர்ந்து 'பணம் கொடுக்கல் வாங்கல் நிலையம்' ஒன்றில் பணிக்கு அமர்ந்தான். இக்காலத்தில் சச்சிதானந்த அடிகள் என்பார் தொடர்பு வாய்த்தது. அவ்வடிகள் சித்த மருத்துவத்தில் சிறந்த தேர்ச்சியாளர். அவர் சிவஞானத்தின் மருத்துவப் பேராசிரியர் ஆனார்; யோகப் பயிற்சியும் கற்பித்தார். அவரை,

“பிச்சிருக்கும் உளத்தன்எனைச் சித்தமுறை பலபயிற்றிப் பெரிய பட்சம் வச்சிருக்கும் குணக்குன்றே"

என்றும்,