உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

விருதுநகரில் செய்யத்தக்க திருப்பணிகள் நிறைவேறின. ரண்டாவது சுற்றைக் கல்மண்டபமாக்கினார். குடமுழுக்கு விழாவும் நடத்தினார். கோயில் திருப்பணி என்றும் தட்டின்றி நடப்பதற்கு மகிமைத் திட்டத்தை உருவாக்கினார். மகிமைப் பணத்தால் நிலம் வாங்கிப் பேட்டையும், கட்டடங்களும் கட்டி வாடகைக்கு விட்டு வருவாயைப் பெருக்கினார். யோகியார் செய்த செயல்கள் வற்றாத ஊற்றாகப் பெருகி வளமை தருவது கண்கூடாகும்.

விருதுநகரில் இருந்து யோகியார் எட்டையபுரம் சென்றார். அதற்கும் ஓர் அடிப்படை உண்டு. அவ்வூரில் வடமொழியில் ஈடிணை இல்லாத பெரும் புலவர் ஒருவர் இருந்தார். குருநாத சாத்திரியார் என்பது அவர் பெயர். அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் விளங்காமல் இருந்தன. ஆனால், அவருக்கு விளங்காத வடமொழி நூல் எதுவும் இல்லை. அவரை அடுத்து வடமொழி கற்க விரும்பினார் யோகியார்! "என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு" என்னும் பொய்யாமொழிக்கு மெய்யாய் சான்றானார் யோகியார்!

சாத்திரியிடம் 'பதஞ்சலியோக சூத்திரம்' என்னும் நூலையும் 'பிரமசூத்திரம்' என்னும் நூலையும் பாடங்கேட்டார். பிரம சூத்திரத்திற்கு நால்வகை விளக்கவுரைகள் உண்டு. அவ்வுரைகளையெல்லாம் ஆராய்ந்தார். தாம் ஒரு புதிய உரையும் கண்டார். ஆகப் பிரம சூத்திரத்தைத் தமிழாக்கி ஐவகை விளக்கவுரைகளுடனும் வெளிப்படுத்தினார்.

மொழி தென்மொழித் தேர்ச்சியுடைய புலவர்கள் பலரையும் கூட்டிப் பிரம சூத்திரத்தை அரங்கேற்றினார். அரங்கேற்றச் செலவு மிகுதியாயிற்று. அச் செலவைச் சேற்றூர் குறுநில மன்னர் சுந்தரதாசுத் தேவரும் சிங்கம் பட்டிக் குறுநில மன்னர் சுப்பிரமணிய தீர்த்த பதியும் ஏற்றுக் கொண்டனர். இவ்வாறு நல்லோரை எல்லாம் ஒருங்கு சேர்க்கும் திறமை யோகியார்க்கு மிகவுண்டு! இவருக்கு அணுக்கராக இருந்து மருத்துவப் புலமை பெற்ற திரு. இ.மு.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், "எத்தகைய பெரிய மனிதர் ஆனாலும் சரி; இவர் சென்று காணும் போது இவருக்கு வசப்பட்டு வேண்டும் துணைபுரிவது உறுதி" என்பது நேரில் கண்டுரைத்த உரையேயாகும்.

யோகியார் எட்டையபுரத்தில் இருந்து கோயிற்பட்டிக்கு வந்தார். அவர் அங்கே வந்த காலத்தில் ஊர்ப் பெருமக்களால்