உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

59

'பத்திவிளை கழகம்' என ஒரு கழகம் தோன்றியிருந்தது. அக் கழகத்தின் தலைவர் ஆயினார் யோகிகள் கிழமைதோறும் தேவார திருவாசகத்திருப்பாடல் முழக்கம் செய்தார்; விரிவுரையாற்றினார். அடுத்த நான்கு ஆண்டுகளில் திராவிடர்கழகம் தோன்றியது. அக் கழகத்திலும் அரிய பணிகள் செய்தார் யோகிகள். கோயிற்பட்டியில் வட்டங்களம், விழாக்களும் மல்கின. அதற்கு யோகிகள் அங்கு உறைந்ததே காரணம் என்பது உண்மை.

1901 இல் மதுரைத் தமிழ்ச் சங்கம் தோன்றியது. அது தோன்றிய நாள் முதல் வாழ்நாள் அளவும் யோகிகள் அதனுடன் தொடர்பு கொண்டிருந்தார். 1934இல் திருநெல்வேலியில் சென்னைமாகாணத் தமிழ்ச் சங்கம் தோன்றியது. அதனைத் தோற்றுவித்தவர்களுள் யோகிகளும் ஒருவர் ஆவர். இவற்றுக்கு இடையில் இவரே 1920 இல் கோயிற்பட்டியில் தமிழ் மருத்துவச் சங்கத்தைத் தொடங்கினார். பின்னர்த் தோன்றிய சென்னை மாகாணச் சித்த வைத்திய சங்கத்தின் அமைச்சராக விளங்கியவர் நம் யோகிகளே. அதன் சார்பில் சித்த மருத்துவப் பள்ளி ஒன்றைத் தொடங்கி 'வைத்தியமணி', 'வைத்தியர்' என்னும் பட்டங்கள் வழங்கினார். சென்னையில் இலவச மருத்துவ சாலை ஒன்றும் நடத்தினார். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இயற்றிய கருணாமிர்தசாகரம் என்னும் அரிய இசை நூலை முழுமையும் ஆராய்ந்து அறிஞர்கள் முன்னிலையில் அதன் சிறப்பை

,

நிலைநாட்டினார். 'தமிழ் வைத்தியம்' என ஒரு செய்தித்தாள் நடத்தினார். தாம் உறைந்தகோயிற்பட்டிக்குக் 'கோயிற்புரிப் புராணம்' என ஒரு நூல் இயற்றினார். நூற்றுக் கணக்கான திருக்கோயில்களுக்குச் சென்று இவர் அவ்வப்போது பாடிய பாடல்கள் ‘கடவுள் மாலை' என்னும் நூலாக வெளிப்பட்டது.

யோகிகள் முதுமை எய்தியபோது, 'இல்லறமே நல்லறம்' என்பதை உணர்ந்தார் போலும்! அதனால் திருமணமும் செய்து கொண்டார். ஆனால், அவ் வாழ்வு நீடிக்கவில்லை. சில ஆண்டுகளிலே இவர் சிவனடி சேர்ந்தார்.

சில அரிய நிகழ்ச்சிகள்

யோகியார் வாழ்வில் சில அரிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன.

அவை, மக்கள் அவரை மதித்துப் போற்றுதற்கு

டமாக

அமைந்தன.