உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள்-2

61

அறியாமல் ஒரு தூண் மறைவுக்குச் சென்று தம் மூக்கைத் தூணில் மோதிக் கொண்டார். அதற்குப் பின்னர்க் காவிரிக்கு நீராடச் சென்றார். எதிரே வந்த ஒருவர், 'நீ எங்கே போகிறாய்?' என்றார். 'நீ' என்றது கேட்டுச் சினங் கொண்டார் யோகிகள். கண் சிவக்க அவரைப் பார்த்தார்."உனக்கென்ன அகந்தை! பொடிபோடுவதை நிறுத்தும் ஆற்றல் இல்லாமல் மூக்கைத் தூணில் மோதியதை மறந்தாயா?" என வினாவி மறைந்தார். அவரை வணங்கி அன்று தொட்டுப் பொடி போடுவதை விட்டார் யோகியார்.