உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

கிடைத்தது. காசு அவர்கள் பேராசிரியர் ஆகியதைத் தம் வெற்றியாகவும், நீதிக் கட்சியின் வெற்றியாகவும் கருதி மகிழ்ந்தார் தியாகராசர்.

பேராசிரியர் 'காசு'வுக்கு வேறொரு பெருமை காத்து நின்றது."உண்மை அறிவே மிகும்" என்பது உண்மையாயிற்று.

உலகப் பெருங்கவிஞர் தாகூர். அவர் தம் குடும்பப் பெயரால் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் "தாகூர் சட்ட விரிவுரையாளர் பரிசு" என்ற ஒரு பரிசுத் திட்டம் அமைந்துள்ளது.

சட்டக்கலை பற்றி மூன்று பொருள்கள் கொடுக்கப்பெறும். அவற்றுள் ஏதாவது ஒன்றைப் பற்றிப் பன்னிரு சொற்பொழிவுகள் செய்தல் வேண்டும். அப் பரிசுப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர் சொற்பொழிவுச் சுருக்கத்தை எழுதி அனுப்புதல் வேண்டும். அவற்றைச் சட்ட நுணுக்கம் அறிந்த குழு ஆய்ந்து தக்கதொன்றைத் தேர்ந்தெடுக்கும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப் பெற்ற கட்டுரையாளர் தாகூர் சட்ட விரிவுரையாளர் எனச் சிறப்பிக்கப் பெற்றுக் கல்கத்தாவுக்குச் சென்று தம் பன்னிரு சொற்பொழிவுகளையும் ஆற்றுவர். பல்கலைக் கழகம் அவருடைய செலவுகளை ஏற்றுக்கொண்டு, பத்தாயிர ரூபா பரிசு வழங்கிப் பாராட்டும். இதுவே தாகூர் சட்ட விரிவுரையாளர் பரிசுத் திட்டமாகும்.

பேராசிரியர் காசு அவர்கள் எடுத்துக்கொண்ட ஆய்வு குற்றங்களின் நெறி முறைகள் (Principles of Criminology) என்பதாகும். மிகச் சிக்கலான இத் தலைப்பை ஆராய்ந்து கட்டுரைச் சுருக்கம் அமைத்து அனுப்பினார். இவர் அனுப்பியதே பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது. பரிசும் கிடைத்தது. அது முதல், “தாகூர் சட்ட விரிவுரையாளர்" என்னும் பட்டம் பேராசிரியர்க்கு வாய்த்தது. இந்திய நாடு முழுவதற்கும் பொதுவாக அமைந்த போட்டியில் வெற்றி வீரராகத் திகழ்ந்த பேராசிரியரை அன்பர்களும் நண்பர்களும் பாராட்டி மகிழ்ந்தனர்.

1919 முதல் 1927 வரை சட்டக் கல்லூரியில் பணி செய்தார் பேராசிரியர் காசு. மாணவப் பருவத்திலேயே அவை கூட்டி ஆராய்ந்தகாசு,ஆசிரிய நிலையுற்ற பின்னர் மறப்பரோ? மயிலாப்பூரில்