உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

இயல்பாக இருந்த உடல் நலிவும் வளர்ந்தது. அதனிடையேயும் நான்காண்டு காலம் சீர் சிறக்கப் பணி செய்தார்.

உழைப்பதற்கு உள்ளம் மட்டும் இருந்தால் போதுமா? உடலும் ஒத்துவர வேண்டுமே! இவர்க்கு நெடுநாட்களாக இருந்த வாதநோய், கைகளை வலுக்குன்றச் செய்தது; நடையையும் தளர்த்தியது. இனிப்பணி செய்ய இயலாது என்னும் நிலைமையும் உண்டாயிற்று.

பேராசிரியர் அவர்களின் புலமை மாண்பை உள்ளவாறு அறிந்தவர்கள் கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் வ. சுப்பையாபிள்ளை அவர்கள். ஆதலால் அவர் நலம்பெற்று நற்றமிழ்த் தொண்டு செய்தற்கு ஆவனவெல்லாம் செய்தல் கடன் எனக் கொண்டார். பேராசிரியர் ஒளவை.சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் துணையுடன் தமிழ்க் காசு நெல்லை சைவ சித்தாந்தக் கழக மாளிகைக்கு வந்துசேர ஏற்பாடு செய்தார்.

கழக மாளிகையில் பேராசிரியர் தங்கினார். நோய் நீங்குதற்குத் தக்க வகையெல்லாம் ஆய்ந்து மருத்துவம் செய்விக்கப் பெற்றன.நோயும் நீங்கினாற்போலத் தோன்றியது. தமிழன்பர் களும் உற்றார் உறவினரும் மகிழ்ந்தனர். எனினும் இறைவன் எண்ணத்தை எவரே அறிவார்? நோய் மீண்டும் முதிர்ந்தது. இனித் தீராது என்னும் நிலைக்குச் சென்றுவிட்டது. அந்நிலையில் பேராசிரியரின் மாமனார் நெல்லை நாயகம் பிள்ளை அவர்கள் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப் பெற்றார். 30-4-1945 ஆம் நாள் அம்மை அம்பலவாணர் திருவடியை நினைந்து பேருறக்கத்தில் ஆழ்ந்தார்.

அருமை மனைவியார் பிரமு அம்மாள் ஆரூயிர்த் தலைவரைப் பிரிந்து ஆறாத் துயருற்றார். அத் துயரிலேயே ஆறு திங்கள் அளவு உயிர் தாங்கி நின்றார். பின்னை, அவரும் இறைவன் திருவடிக்கு ஆளாயினார்.

பேராசிரியர் அவர்களுக்கு மக்கள் மூவர் உளராயினர். அவர்கள் மீனாட்சிசுந்தரம், திருநாவுக்கரசு, மங்கையர்க்கரசி

என்பார்.

“தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்" என்பது வள்ளுவர் வாய்மொழி! காசு விட்டுச் சென்ற செல்வங் களை இவ்வளவு என்று வரையறுக்க முடியுமோ? வரலாற்று நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், சமய நூல்கள், அறிவுச்சுடர்