உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

நீதிநெறிவிளக்கம், சிவப்பிரகாசம்

இவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள்;

இந்தியத் தண்டனைத் தொகுதி

விரிவுரைகள் (Lectures on the Indian Penal Code) முதலிய நாற்பதுக்கு

மேற்பட்ட நூல்களியற்றி, பல பேரவைகளில்

தலைமைதாங்கிச் சொற்பொழிவாற்றித்

தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராய்த் தமிழ்மக்கட்குப் பல்லாற்றானும் பணிசெய்து

ல்

30-4-1945 ல் மனைவியாருடன் மக்கள் மூவரையும்

பிரிந்து திருவருட் பேறெய்தியதை நினைந்து

நிலைநாட்டப்பெற்றது.

தென்னிந்திய தமிழ்ச் சங்கம்,

திருநெல்வேலி

வ.சுப்பையா பிள்ளை,

அமைச்சர்

71

இந்நடுகல்லை யன்றித் தென்னிந்திய தமிழ்ச் சங்கச் சார்பில் தொடங்கப் பெற்ற கா. சு. பிள்ளை ஆராய்ச்சி மன்றமும், குளித்தலையில் திரு. இளமுருகு பொற்செல்வி அவர்களால் நடத்தப்பெறும் கா.சு. பிள்ளை தமிழ் மன்றமும் நல்ல நினைவுச் சின்னங்களாம்.

சில சுவையான செய்திகள்

கா. சு. பிள்ளை அவர்கள் சென்னையில் பயிலும்போது விக்டோரியா மாணவர் விடுதியில் இருந்தார். ஒரு நாள் விடுதி மாணவர் சிலர் விடுதிக் காப்பாளரிடம் சென்று "இவர் பூசை செய்யும்போது மணியடிப்பது தொல்லை தருகின்றது. அதனைத் தடுக்க வேண்டும்" என வேண்டிக் கொண்டனர். விடுதிக் காப்பாளர் இவர் பூசை செய்யும் பொழுது வந்து பார்த்தார். பூசை முடிந்ததும் "மணியாட்டி, (Bell man) நீர் அடிக்கும் மணி வர்களுக்கு இடையூறு செய்கிறதாம்" என்றார்.

"ஓ! இவர்களுக்கு இடையூறாக இருந்தால் நாளை முதல் மணியடிப்பதை நிறுத்திவிடுகிறேன். பூசை செய்வது நன்மைக்கு