உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

அன்றிப் பிறர்க்கு இடையூறு செய்வதற்கு அன்று" என்று கூறித் தாம் இடைஞ்சல் செய்ததற்காகப் பொறுத்துக் கொள்ளவும் வேண்டினார். குறை சொல்லிய மாணவர்கள் உண்மையில் குறை கண்டவர்கள் அல்லர்! வேடிக்கைக்காகவே கூறினவர் ஆதலால், "மணியாட்டி, நீங்கள் மணியடிப்பது எங்களுக்குச் சிறு இடையூறும் செய்யவில்லை! எங்களால் பூசை செய்ய முடியவில்லை! பூசை செய்யும் உங்களை மதிக்கிறோம். நீங்கள் வழக்கம்போல் மணி யடித்துப் பூசை செய்யுங்கள்” என்று கூறினர். பாதுகாப்பாளரும் மகிழ்ந்தார்.

தமிழ்க் காசு இடைநிலை வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது அந்தோனி என்பார் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார். அவர் ஒரு நாள் தாம் சொல்லச் சொல்ல மாணவர்கள் எழுதுமாறு செய்து கொண்டிருந்தார். ஆனால், அதனைக் காசு எழுதவில்லை. கருத்துடன் கேட்டுக் கொண்டு மட்டும் இருந்தார்.பாடம் சொல்லி முடிந்ததும் எழுதியதைப் படிக்குமாறு காசுவைக் கேட்டார். இவர் ஒரு பிழையும், முறைமாற்றமும் இல்லாமல் முழுமையாகச் சொல்லி முடித்தார். பேராசிரியர்க்கு மிக வியப்பு ஆயிற்று! மாணவர்கள் நிலையைச் சொல்ல வேண்டுமா? அத்தகைய நினைவாற்றல்!

பேராசிரியர் காசு அவர்கள் நீதிபதி திரு. வெங்கட சுப்பா ராவ்.நீதிபதி திரு. தேவதாசுப் பிள்ளை ஆகிய இருவரையும் விருந்துக்கு அழைத்திருந்தார். அவர்கள் வந்தபோது பூசை அறையில் இருந்தார் காசு. தம்மை மறந்து இறையன்பில் மூழ்கிக் கண்ணீர் வார்ந்து உருகி நிற்றல் இவர்க்கு இயல்பு. பொழுதும் அறியார்; பிறவும் அறியார்! பூசை முடித்த பின்னரே விருந்துக்கு அழைத்த செய்தி நினைவுக்கு வர விரைந்து வந்தார். நெடுநேரம் காத்திருந்த நீதிபதி தம்மைப் பொறுக்குமாறு வேண்டிக் கொண்டார். "ஐயா, உண்மை வழிபாடு இன்னது என்பதைத் தங்களிடம் அறிந்தோம். நீவிர் வருந்தற்க" என்று போற்றினர். தம்மை மறந்து ஈடுபடும் தனிநிலையே பத்தி அன்றோ!

சட்டக் கல்லூரிக்கு மின் பேருந்தில் போய்க் கொண்டி ருந்தார் காசு. அவர் இனிய நண்பரும் வழக்கறிஞருமாகிய சிவஞானம் பிள்ளையை அங்கே கண்டார். காசு சட்டைப் பொத்தான்களைத் துளை மாறி மாறி மாட்டியிருந்தார். மாட்டாமலும் விட்டிருந்தார். இவற்றைக் கண்ட சிவஞானம் பிள்ளை அவற்றைச் சரி செய்ததுடன், அறிவாளிகள் இப்படித்தாம்