உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

73

இருப்பார்கள் போலும் என்று எண்ணி வியப்புற்றார். மேதைகள் வரலாறு இத்தகையதுதானே!

பொறியியல் துறையில் பேரறிஞராக விளங்கியவர் பா.வே. மாணிக்க நாயகர். அவர் தமிழ் மொழிக்கு அரிய தொண்டு செய்த பெருமகனார். கழக அமைச்சர் திருவரங்கனார்க்கு எழுதிய கடிதம் ஒன்றில், “இக் காலத்தில் ஆண்டவன் அருளால் உள்ளுணர்ச்சியுடன் கூடிய நிகரற்ற பெரும் புலவர் கா.சுப்பிரமணிய பிள்ளையவர்கள். ஆனால், அவர்கள் தம்முடைய பெருமைகளை அறியாதிருக் கின்றார்கள்." அதனால் ஒலிப்பன அல்லவாகிய உயர்ந்த உலோகங்களைப் போல அவர்கள் ஆரவாரம் செய்வதில்லை. நானோ மங்கிய உலோகங்களைப் போலத் தமிழ் நாட்டில் பெரிய ஆரவாரம் முழக்கி வருகின்றேன்" என்று எழுதியுள்ளார். ஒலியில்லாத் தங்கம் காசு என்பதை அறிஞர் பா. வே. மா. அன்றே கண்டார்! புலமையாளரை எடைபோடப் புலமையுடையார்க்குத் தாமே இயலும்!