உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சொல்லின் செல்வர்

சிலர் சொல்லும் சொற்கள் வெறுஞ் சொற்களாகத் தோன்றுவன அல்ல. அவை 'மணி மொழி' என்றும் 'பொன் மொழி என்றும், 'முத்துக்குவியல்' என்றும் 'கருத்துக் களஞ்சியம்' என்றும் பாராட்டப்படுகின்றன. மதித்துப் போற்றவும்படுகின்றன. இதனால் சொல்லின் மதிப்பு விளங்கும்.

தமிழில் உள்ள சில சிறு நூல்கள் இணைமணி மாலை, இரட்டைமணி மாலை, மும்மணி மாலை, நான்மணி மாலை என்று பெயர் பெற்றன. இதனால் சிறந்த வாக்குகளைப் பாராட்டினர் என்பது வெளிப்படும்.

300 அடிகளையுடைய பட்டினப்பாலையைப் பாடிய கண்ணனார் என்னும் புலவர்க்குக் கரிகாற் சோழன் பதினாறு நூறாயிரம் பொன் வழங்கினான். இதனால் விலை மதிப்பில்லாச் செல்வம் சொல்லே என்பது உறுதியாகும்.

மதுரையை அடுத்துள்ள திருவாதவூரில் பிறந்த ஒருவர் 'திருவாதவூரர்' என்று அழைக்கப் பெற்றார். பின்னர் அவர் வாக்கின் அருமை அறிந்தோர் அவரை மாணிக்க வாசகர் என்று அழைத்தனர். அவர் பாடிய வாசகம் 'திருவாசகம்' ஆயிற்று. சொல்லின் சிறப்பு அன்றோ இது.

முன்னோர் வழங்கிய சொற்களைச் செல்வமாகக் கருதித் தொகுத்து வைத்துக் கொண்டு அச் செல்வத்தைத் தக்க இடத்தில் வள்ளல்போல வாரி வழங்குபவர்க்கு எப்பெயர் சூட்டலம்? 'சொல்லின் செல்வர்' என்று பெயர் சூட்டலாம் அல்லவா! அத்தகைய சொல்லின் செல்வரே இரா. பி. சேதுப்பிள்ளை.

,

பணிந்த மொழியுடனும் வணங்கிய கையுடனும் இராமனைக் காணுகின்றான் அனுமான். அவன் சொல்லிய சொல்லின் நயங்களையும் இனிமையையும் உணர்கிறான் இராமன். தம்பி இலக்குவனை நோக்கி, "யாவனோ இச் சொல்லின் செல்வன்" என்று வினாவுகின்றான். இராமாயணத்தின் சுவையில் ஈடுபட்டு