உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

என்று ஏவினர். அவ்வாறே செய்தார் சேது. அடிகள், "தம்பி, இது மிகச் சிறந்த அறநூல்; விடுமுறையில் இங்கு வரும் போதெல்லாம் என்னிடம் வா. உனக்கு இதனைக் கற்றுத் தருகிறேன். நாள்தோறும் ஐந்து குறட்பாக்களை மனப்பாடம் செய்து என்னிடம் ஒப்பிக்க வேண்டும். அதனால் நீ பிற்காலத்தில் பெரும்பயன் பெறுவாய் என்று கூறினார். அடிகளார் அறிவுரைப்படியே அன்று முதல் திருக்குறளை மனப்பாடம் செய்து வந்தார் சேது.

பாளையங் கோட்டையில் சைவ சபை ஒன்று உண்டு. சேது அச்சபை நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் போவார். சேது சேவியர் பள்ளியில் படிக்கும்போது அதன் வெள்ளிவிழா நடந்தது. அவ் விழாவுக்குச் சேது தொண்டர் படைத் தலைவராக இருந்து பணி புரிந்தார் விழாவுக்கு வரும் பெரியோர்களை அழைத்து வருதல், அவர்களுக்கு வேண்டும் உதவிகள் புரிதல், கூட்டத்தில் ஆவன செய்தல் ஆகிய பொறுப்புகளைத் தொண்டர்கள் சிறப்பாகச் செய்தனர்.

வெள்ளி விழாத் தலைமையைப் பாலவனத்தம் குறுநில மன்னர் பாண்டித்துரைத் தேவர் ஏற்றார். சோழவந்தான் அரசஞ் சண்முகனார் பேருரையாற்றினார். அவர், தொண்டர் படைத் தலைவராகிய சேதுவை அழைத்து, “நீங்கள் பள்ளிப் பிள்ளைகளா?” என்று வினவினார். ஆம்; சேவியர் பள்ளியில் படிக்கிறோம்! சைவ சபைத் தொண்டர் படையில் சேர்ந்துள்ளோம்" என்று பணிவுடன் கூறினார் சேது. பின்னர்த், "தாங்கள் குளிப்பதற்கு வெந்நீர் வேண்டுமா? தண்ணீர் வேண்டுமா? எது வேண்டு மானாலும் இருக்கிறது" என்று கூறினார் சேது. அது கேட்ட சண்முகனார், "நாள்தோறும் வையை ஆற்றில் குளித்துப் பழகியவன் யான். அதனால் தண்ணீரே போதும்; நீங்கள் நல்ல சிறுத் தொண்டர்கள், தொண்டு செய்வது மிகவும் நன்று; தொண்டர்தம் பெருமை, சொல்லுவது அருமை என்று பாராட்டினார். பெரும் புலவர் அரசஞ் சண்முகனாரால் 'சிறுத் தொண்டர் என்று பாராட்டப் பெற்ற சேது வாழ்நாள் எல்லாம் தமிழ்த் தொண்டராக விளங்கினார். முற்றுந் துறந்த பட்டினத்து அடிகளாராலும் ஒப்பில்லாத் தொண்டராக உரைக்கப் பெற்றவர் அல்லரோ சிறுத்தொண்டர்!

"

சேவியர் பள்ளியில் படித்த சேது பள்ளியிறுதி வகுப்புத் தேர்வைச் சிறப்பாக எழுதிவிட்டு ஊர்க்குச் சென்றார். அருந்தவங் கிடந்து தம்மைப் பெற்ற அன்னையார், பாயும் படுக்கையுமாகக் கிடப்பதைக் கண்டு சொல்ல முடியாத துயருற்றார். அத்துயர்