உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2 “நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று”

79

என்பது வள்ளுவர் வாய்மொழி. நாநலத்தைப் பெற்றவர்க்கு எந்த நலம்தான் அரிதாகும்? சொல்லின் செல்வர் புகழ் பக்கமெல்லாம் பரவியது. பேரூர் சிற்றூர்களிலும் அவர் பேருரை நிகழ்ந்தது. நெல்லை நகர் மன்றம் அவர் தொண்டைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பித் தன் உறுப்பினராக்கிக் கொண்டது; மும்முறை தொடர்ந்து தேர்ந்து கொண்டது. நகர்மன்றத் துணைத் தலைவரும் ஆக்கிப் பெருமை கொண்டது.

நகர் மன்றப் பணியில் சொல்லின் செல்வர் ஈடுபட்டது நற்றமிழ்ப் பணிக்கும் வாய்ப்பு ஆயிற்று.அவர் பணியால் கூழைக்கடைப் பசார் 'கூலக்கடைத் தெரு' ஆயிற்று. விளாமடித் தெரு 'விலங்கடித் தெரு' ஆயிற்று. அக்கா சாலைத் தெரு, 'அக்கசாலைத் தெரு' ஆயிற்று. பழம் பெயர்ச்சிறப்பை உணர்ந்து சிதைவை மாற்றிச் செம்மைப்படுத்தினார் சொல்லின் செல்வர். நகர்மன்ற ஆட்சி புரிவோர்க்கு நற்றமிழ்ப் புலமை வேண்டும் என்பதும், அப் புலமை அமைந்தவராய் அருந் தொண்டாற்றினால் தான் நகரில் தமிழ்முணங் கமழும் என்றும் நடைமுறையிற் காட்டினார் சொல்லின் செல்வர்! ஆயினும் இந்நாள்கூட சேது வளர்த்த செந்தமிழை நகரங்களில் காணற்கு முடிவதில்லை! "தமிழ் நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ் தான் இல்லை" என்னும் நிலைமைதான் உள்ளது.

64

கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப் போல், பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை என்றார் பாரதியார். அப் புலவர்கள் படைத்த இராமாயணம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களை ஆராய்ந்து நயங்கண்டார் சொல்லின் செல்வர். அந்நயங்களைச் செல்லுமிடந்தோறும் சொல்மாரியாகப் பொழிந்தார். சொல் காற்றில் கலந்து போய்விடவும் கூடுமே! அதனை நிலைக்கச் செய்ய வழியென்ன? நூல் நயங்களையெல்லாம் எழுத்து வடிவில் உலாவ விடுவதே அழியா வாழ்வு தருவது என்பதை உணர்ந்தார். அதனால் அவர் கட்டுரைகளை அருந்தமிழ் இதழ்கள் தாங்கி வெளிப் போந்தன. நூல் வடிவும் எடுத்தன. இதனால் சொல்லின் செல்வர் செல்லாத டங்களுக்கும் அவர் தம் எழுத்து ஓவியங்கள் சென்றன. செல்வாக்கை உண்டாக்கித் தந்தன. எதுகை மோனை

நயம் அமைந்த அவர் தம் சொற்கள் கற்றோர் நெஞ்சில் கல்லில்