உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

எழுத்துப்போல் நின்று இன்புறுத்தின. இவை சொல்லின் செல்வரை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் விரும்பி அழைக்க வகை செய்தது.

று

தமிழ்க் காசு (பொன்) என்று சொல்லப் பெறும் பெருமகனார் கா. சுப்பிரமணிய பிள்ளை ஆவர். நெல்லையைச் சேர்ந்த அப் பெருமகனார் சொல்லின் செல்வர் திறமையை நன்கு அறிந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தமிழ்த் துறைக்கு அவரை அழைத்துக் கொள்ள நினைந்தார். அதனைச் செயற் படுத்தவும் செய்தார். செந்தமிழ்ச் சேது தமிழ்த் துறையையே தம் தொழிற்றுறையாகக் கொண்டு பணி செய்ய ஒரு திருப்பம் தந்தவர் தமிழ்க் காசுவே ஆவர்.

சொல்லின் செல்வர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணிசெய்தபோது பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், புலவர் பொன்னோதுவார், சர்க்கரை இராமசாமிப் புலவர், பேராசிரியர் கந்தசாமியார் ஆகியோர் பணிசெய்து வந்தனர். கலைக்கல்லூரி மாணவர்க்கும், புலவர் வகுப்பு மாணவர்க்கும் இராமாயணம், திருக்குறள், சிலப்பதிகாரம், மொழிநூல் ஆகியவற்றை நடத்தினார். செல்வர் வகுப்புக்கு, வகுப்பு மாணவரும் செல்வர்! பிறரும் செல்வர்! சொல்வாக்குச் செல்வாக்காக வளர்ந்தது!

அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பணிச்சிறப்பு சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறைக்கு அழைத்தது. விரைவில் தமிழ்ப் பேராசிரியராக விளங்கினார். ஆராய்ச்சித் துறைத் தலைவராக அமர்ந்தார். பொழுதை யெல்லாம் ஆராய்ச்சியிலேயே செலவிடுவது பெருவாய்ப்பு அல்லவா! இவ் வாய்ப்பு தமிழன்னைக்கு இணையற்ற பல அணிகலங்களைப் பூட்டி அழகு செய்தன.

'ஊரும் பேரும்', 'திருவள்ளுவர் நூல் நயம்', 'சிலப்பதிகார நூல் நயம்', 'தமிழ் இன்பம்', 'தமிழ் நாட்டு நவமணிகள்', 'தமிழர் வீரம்', 'தமிழ் விருந்து', 'வேலும் வில்லும்', 'வேலின் வெற்றி', 'வழிவழி வள்ளுவர்', 'கால்டுவெல் ஐயர் சரிதம்', 'திருக்காவலூர்க் கோயில்', 'கிறித்துவத் தமிழ்த் தொண்டர்”, “தமிழகம் அலையும் - கலையும்', 'கடற்கரையிலே', 'ஆற்றங்கரையினிலே' என்பவை சொல்லின் செல்வர் ஆராய்ச்சியில் வெளிப்பட்ட அரிய நூல்களாகும்.