உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

81

'தமிழ்க் கவிதைக் களஞ்சியம்”, ‘செஞ்சொற் கவிக் கோவை’, 'பாரதியார் இன்கவித் திரட்டு' என்பவை சுவைதேர்ந்து வழங்கிய தொகுப்பு நூல்களாகும்.

இவற்றுள் ஊரும் பேரும் என்னும் ஒப்பற்ற ஆராய்ச்சி நூல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஐந்நூறு வெண்பொன் பரிசு பெற்றது. தமிழ் இன்பம் என்னும் அரிய நூல் இந்தியப் பேரரசின் ஐயாயிரம் வெண்பொன் பரிசு பெற்றது.

இவ்வாறு சொல்லாலும், எழுத்தாலும், தொண்டாலும் தமிழ் வளர்த்த சொல்லின் செல்வரைப் புகழ் தேடி வந்து அடைந்தது இயல்பேயாம். அறிவுடையோர் பாராட்டுக்கு அமைவிடமாக இருந்த சொல்லின் செல்வர், சென்னைப் பல்கலைக் கழகத்தில் 25 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப் பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா 1957 இல் நிகழ்ந்தது. அப்பொழுது அரும்பணி ஆற்றிய பெரும் புகழ்ச் செல்வர் சேதுப்பிள்ளையின் செந்தமிழ்த் தொண்டு பாராட்டப்பெற்றது. அதன் முகத்தான் அவருக்குப் பண்டாரகர் (டாக்டர்) என்னும் தகுதிவாய்ந்த பட்டம் வழங்கப்பெற்றது.

சொல்லின் செல்வர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் 25 ஆண்டுகள் பணிபுரிந்தார் அல்லவா! அதனைப் பாராட்டுமுகத்தான் 13-4-1961 இல் வெள்ளி விழா எடுக்கப் பெற்றது. அவர்தம் திருவுருவப் படம் அவ்விழாவில் பல்கலைக் கழகத் துணைவேந்தர் இலக்குமணசாமி முதலியார் அவர்களால் திறந்து வைக்கப்பெற்றது. ஆற்றங்கரையினிலே என்னும் நூல் அன்று வெளியிடப் பெற்றது. வெள்ளிவிழா மலரை மலேயாப் பல்கலைக் கழகப் பேரறிஞர் தனிநாயக அடிகள் வெளியிட்டார். செட்டிநாட்டரசர் முத்தையா செட்டியார் அவர்கள் சொல்லின் செல்வர் சேவையைப் பாராட்டினார். விழாச் செல்வர் நன்றியுரை படிக்கப்பெற்றது ஏன்? அவர் உடல் நலக் குறையால் மருத்துவமனையில் இருந்தார்!

2-3-1961இல் பணியில் இருந்து தாமே ஓய்வு கொண்டார் சொல்லின் செல்வர். அப்பொழுதே உடல் நலங்குறைந்திருந்த செல்வர் ஓய்வின்பின் பெரிதும் நலிவடைந்தார். 14-4-1961இல் சென்னை அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப் பெற்றார். அரிதின் முயன்று, தமிழ் நாட்டுச் செல்வம் எனக் காக்கத் துணிந்தாலும், இயற்கையை வெற்றிகொள்ள இயலுமோ? தேன் மழை பொழிந்த சொல்லின் செல்வரின் திருவாய் 25-4-1961 காலை 11-30 மணியளவில் மூடியது! அன்று மாலை 6-30 மணியளவில் அடையாற்றைச் சார்ந்த நன்காட்டில் அவர் உடல் எரிமூட்டப்