உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

பெற்றது. செந்தமிழ்ச் சேது ஒளியுருக் கொண்டார்! அருமை மனைவியாரும் அன்புத் தமிழரும் கொண்ட அவலத்திற்கு அளவும் உண்டோ! இதழ்கள் அழுதன! மலர்கள் கண்ணீர் வடித்தன! மன்றங்கள் இரங்கின! அவைகள் அரற்றின! செல்வர் வழிகாட்டும் ஒளிவிளக்காக அமைந்தார்!

சொல்லின் செல்வர்க்கு மக்கட் செல்வம் வாய்க்கவில்லை. ஆனால், தாம் பெற்ற மாணவச் செல்வங்கள் எல்லாம், மாத்தமிழ்ச் செல்வங்கள் எல்லாம் தம் செல்வங்களாகவே போற்றினார். அதனால் தேடிச் சேர்த்த செல்வங்களையெல்லாரம் அச் செல்வங்கள் நன்மைக்காகவே வாரி வழங்கி வள்ளலானார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் ஆகிய இரண்டு பல்கலைக் கழகங்களிலும் பணிபுரிந்தவர் அல்லரோ நம் சொல்லின் செல்வர்? அப் பல்கலைக் கழகங்களில் தம் அன்னையார் சொர்ணம்மையார் பெயரால் தனித்தனி இருபத்தையாயிரம் வெண்பொற் காசுகளை வைப்பு நிதியாக வைத்துச் சொற்பொழிவு அறக்கட்டளைகளை நிறுவினார். தமிழ் இலக்கியம், சமயம் ஆகியவற்றைப் பற்றிச் சிறந்த அறிஞர்களைக் கொண்டு ஆண்டுதோறும் ஐந்து சொற்பொழிவுகள் ஆற்றுதல் வேண்டும்! அதற்கு வைப்புத் தொகையின் வட்டித் தொகையைப் பயன்படுத்திக்கொள்ளுதல் வேண்டும் எனத் திட்டமிட்டார். தனால் சொல்லின் செல்வரின் தாயன்பும், தாய்மொழியன்பும், பணிபுரிந்த இடங்களின்மேல் கொண்டிருந்த பற்றும் புலப்படும்.

பல்கலைக் கழகங்களுக்கு வழங்கிய தொகை போக எஞ்சிய தம் செல்வம் எல்லாமும், தாம் இயற்றிய நூல்களின் வழியே வரும் வருவாய் எல்லாமும் திருநெல்வேலி நகர்மன்றத்தைச் சார்ந்த மகப்பேறு மருத்துவமனைக்கு வழங்கினார்! "மகப்பேறு வாய்க்காமை குறையன்று; நாட்டு மக்கள் அனைவரும் எம் நன்மக்களே என்று வாழும் பெரு நிலை பெற இறைவன் அருளியதேயாம்" என்னும் எண்ணத்தால், சொல்லின் செல்வர் அறச்செயல் செய்தது போல் பிற செல்வரும் செய்வரோ! அவ்வாறு செய்யாமையால் அல்லவோ பலர் செல்வம் பாழுக்கு இறைக்கப்பட்டும், வம்புக்கம் வழக்குக்கும் ஆட்பட்டும் அழியாப் பழிக்கு உறைவிடமாகின்றன? வள்ளல் பெருமான் சொல்லின் செல்வர் வழி சிறப்பதாக!