உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

சில சுவையான நிகழ்ச்சிகள்

83

சொல்லின் செல்வர், சேவியர் உயர் பள்ளியில் எட்டாம் வகுப்பில் படித்தார். அவருக்கு ஞானப்பிரகாச சுவாமிகள் என்பார் ஆசிரியராக இருந்தார். அவர் வகுப்பில் எவரேனும் தமிழில் ஒரு சொல் சொன்னாலும் அதற்கு ஒரு காசு தண்டனை உண்டு. அவ்வாறு தண்டனை மிகுதியாகச் செலுத்தியவர் நம் சொல்லின் செல்வரே ஆவர்.

சொல்லின் செல்வர் சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியரான பின் திருச்சி சூசையப்பர் கல்லூரியில் நிகழ்ந்த வீரமாமுனிவர் விழாவுக்கு விரிவுரை நிகழ்த்த வந்தார். சேவியர் பள்ளி ஆசிரியர் ஞானப்பிரகாச சுவாமிகள் திருச்சி சூசையப்பர் கல்லூரி ஆட்சியாளாராகி ஓய்வு பெற்று அங்கே இருந்தார். அவர்க்குப் பழைய சேதுவின் நினைவு உண்டாயிற்று. அவர் அங்கே இருப்பதை அறிந்த சொல்லின் செல்வர், அவரைக் கண்டு அளவளாவி இன்புற்றார். அப்பொழுது "நான் தங்களிடம் மாணவனாகப் பயின்ற நாளில் தங்கள் வகுப்பில் தமிழில் பேசியதற்காகச் சொல்லொன்றுக்கு ஒரு காசு தண்டனை செலுத்தினேன். இன்று தங்கள் கல்லூரியில் இரண்ாயிரம் சொற்களுக்குக் குறையாமல் பேசுவேன். அதற்குரிய ஒறுப்புக் கட்டணத்தைத் தங்களிடம் முன்னதாகவே செலுத்திவிடலாமா?' என்றார். அப்பொழுது ஞானப்பிரகாசர், “அக்கால நிலைவேறு; இக்கால நிலைவேறு; எங்கம் தமிழ் என்னும் நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. நானும் இதனை விரும்புகிறேன. நானும் இப்பொழுது உங்களுடன் தமிழில்தான் பேசுகிறேன் என்று கனிவுறக் கூறினார்.

சேதுவுக்குத் திருக்குறள் பரிசு கிடைத்ததையும் செப்பறை அடிகள் உரைத்தபடி அதனை மனப்பாடம் செய்ததையும் அறிவோம்! இராசவல்லிபுரத்தில் வாழ்ந்த செல்வர் சங்கர சுப்பிரமணியபிள்ளை என்பவர் தம் செல்வத்தை எல்லாம் திருவள்ளுவர் பெயரால் அறக்கட்டளை நிறுவியவர் ஆவர். அவர் செப்பறை அறக் கட்டளை நிறுவியவர் ஆவர். அவர் செப்பறை அடிகளை ஒரு முறை கண்டபோது, "சேது திருக்குறள் அறத்துப்பாலைக் கரைத்துக் குடித்துவிட்டான்” என்றார். அதற்கு அவர், "குறளைக் கரைத்துக் குடிப்பானேன்; அது பால் அமுது அல்லவா! இனிக்கப் பருக வேண்டிய பொருள் அன்றோ" என்றார். பின்னர்ச் சேதுவைப் பார்த்து, "தம்பி டோடோ என்பது எந்தக் குறளில் வருகிறது?" என்று வினவினார்.