உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

'உடலைப்பற்றிய சாதியினும் உயிரைப்பற்றிய சமயமே பெரியதென்பது சமய நூற்கொள்கை' என்று உண்மை தெரிக்கிறார்

கா.சு.

இனிக் கூட்டமற்ற நாளில் இறையன்பாளர்கள், வாய்ப்பான தொலைவில் நின்று தாமே மலர் தூவி வழிபாடு செய்தற்கு இடங் கொடுத்தல் வேண்டும் என்னும் கருத்தையும் காசு கூறுகிறார்.

நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லேன்" என்று ஏங்கவும், “கண்ணப்பன் ஒப்பதோர்அன்பு இல்லை” என்று வியக்கவும் செய்யும் காளத்திவேடன், தானே தன் நிலையில் வழிபட்டதை எண்ணின் உண்மை விளங்கும்.

கோயில் சூழல்

கோயில்களில் மெய்ப் பொருள், இசை, கூத்து, பொழிவு இன்னவெல்லாம் பயில வாய்ப்பு வேண்டும் என்றும், சோம்பர்க்குத் துயிலிடமாகவும், பிச்சையர்க்குப் புகலிடமாகவும் கோயில்இருக்கும் நிலையைத் தவிர்த்தல் வேண்டும் என்றும் பிறவும் கூறுகிறார்.

பிச்சையொழிப்புக்கு வழி காட்டுகிறார் கா.சு.

"பிச்சைக்காரர்களுக்குத் தருமம் செய்ய விரும்பும் மக்கள் நன்கொடைகளை ஒருங்கு சேர்த்து ஏழைகளுக்குத் தொழிலும் உணவும் உதவும் நிலையங்களைக் கோயில் அலுவலர்கள் நிறுவி நடாத்த வேண்டும்" என்பது அது.

ஆரிய வருண வேறுபாடுகள் ஆகமத்துட் புகுந்த பின்னர்க் கோயிலுள் சாதிக் கட்டுகள் புகுந்தன. அக்கால நிலையிலும்கூடத் திருநீலகண்டயாழ்ப்பாணருக்கு அந்தணராகிய திருஞானசம்பந்தர் அருகில் நின்று கோயிலில் அவர் பாடும் பாடல்களை யாழிலிட்டு வாசிக்கும் பேறு கிடைத்தது. அந்தணர் வீட்டில் வேள்வி மேடையில் தம் மனைவியோடு தங்கும் உரிமையும் கிடைத்து. வைணவத்தில் காவிரிக்கரையில் பாடி நின்ற திருப்பாணாழ் வாரைத் திருவரங்கத்து அருச்சகர் தோளில் தூக்கிச்சென்று பெருமாளுடன் ஐக்கியம் செய்வித்த வரலாறு கேட்கப்படுகிறது. அந்நிலையும்கூட அழிந்ததே என்று இரங்குகிறார் காசு.